பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

அப்பாத்துரையம் - 35

நெஞ்சை உருக்கிற்று. அதே சமயம் சிறுவன் வேனிலைச் செந்தாமரை தன் கண்ணைவிட்டு அகல விடவில்லை. அவள் தன் பெயரனே என்பது அவளுக்குத் தெரியாது. ஆனாலும் அவன் கடம்பனையே உரித்து வைத்ததுபோல் இருந்ததனால், அவன்மீது அவளுக்கு எல்லையிலாப் பாசம் ஏற்பட்டது. ஆகவே, அவள் வாணகையிடம் கனிவுடன் பேசினாள்.

"நங்கையே, எனக்கு உன் ஊழியம் தேவைப்படா விட்டாலும், அரசி கயற்கண்ணிக்கு அது கட்டாயம் தேவைப்படும். அங்கே உனக்கு வேலை கிடைக்கும். ஆனால், போகும்போதும் வரும்போதும், என்னை அடிக்கடி வந்து பார்த்துப்போ. என் கண்களுக்கு இந்தச் சிறுவனைக் காட்டி விருந்தளித்துப் போ" என்றாள்.

வாணகைக்கு, அரசி கயற்கண்ணி வேலை கொடுத்தாள். அங்கேயே பகலெல்லாம் சென்று அவள் வேலை செய்தாள். அவள் கழுத்தில் கிடந்த தன் கணவன் உயிர்மாலையையும் அவள் குறிப்பாகப் பார்த்துக் கொண்டாள். சிறுவன், வேனில் போகும்போதும் வரும்போதும், அரசி செந்தாமரையிடம் சென்று விளையாடி வந்தான்.

தன் திட்டத்துக்கேற்ப, வாணகை ஒருநாள் வேனிலுக்குப் பாடம் கற்பித்தாள். அதன்படி நடக்கும்படி அவனைப் பழக்கினாள். அவனுடன், அரசி கயற்கண்ணி மாளிகைக்குச் சென்றாள்.

அன்று வழக்கமீறி அவள் அரசிக்குத் தொண்டூழியம் செய்தாள். அன்று அரசி தன் அழகைக் கண்ணாடியில் கண்டு மலைத்துப் போனாள். அவள் உள்ளம் களிப்பில் மிதந்திருந்தது. ஆனால், அச்சமயம் வேனில், அவளிடம் வந்து, கண் கசக்கி அழுதான்.வாணகை அவனை இழுத்தும், அவன் வர மறுத்தான்.

66

கயற்கண்ணி அவனை அருகே அழைத்து, என்ன வேண்டும், குழந்தாய்!" என்று கேட்டாள். அவன் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே உயிர்மாலையைச் சுட்டிக் காட்டினான்.

“அந்தப் பொன்மாலை எனக்குவேண்டும்" என்று கூறிப் பின்னும் கரைந்தான்.“அதையெல்லாம் கேட்கப் படாது” என்று வாணகை, திட்டப்படி அவனைக் கண்டிக்க முனைந்தாள்.