பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(300

||–

அப்பாத்துரையம் - 35

அண்மையில் வந்து கூடினார்கள். மோசக்காரன் ஒவ்வொரு வரிடத்திலும் ஒவ்வொரு ரூபாய் வாங்கிக்கொண்டு இறுதியில் லாயத்தின் கதவைத் திறந்தான். உள்ளே நுழைந்த அவ்வளவு பயரும் தம்முடைய அறியாமைக்காக வெட்கமடைந்தது மட்டுமல்லாமல், குதிரைக்கு வாலிருக்க வேண்டிய இடத்தில் தலையிருக்கிறது என்று அவன் சொன்ன சூதை அறிந்து கொண்டு, ஐயோ சிறிது எண்ணிப் பார்க்காமற் போனோமே. இவ்வளவு பேரிடத்திலிருந்தும் பணத்தைப் பறித்துக் கொண்டு பைத்தியக்காரர்களாக்கி விட்டானே என்று மிகுந்த வருத்த மடைந்தார்கள். அவன் கூறிய செய்தி தவறான தென்று அவன் மீது குற்றஞ் சாட்டுவதற்கும் இடமில்லை. அவன் கூறிய படியே வால் இருக்க வேண்டிய இடத்தில் தலை இருந்தது.