பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பச்சைக்கிளி

நெய்வேலி என்ற நாட்டில் காயாம்பூ என்ற ஓர் அரசன் இருந்தான். அவன் ஒருவர் பின் ஒருவராக ஆறு மனைவியரை மணந்து கொண்டான். ஆறு பேரும் ஒப்பற்ற அழகிகளே. ஆனால்,அவர்கள் குணங் கெட்டவர்களாக இருந்தாள். அவர்கள் ஒருவருக்காவது குழந்தையும் கிடையாது. ஆனால், மன்னன் கனிந்த உள்ளமுடையவன். ஈ எறும்பைக்கூட அவன் துன்புறுத்த

மாட்டான்.

நெய்வேலியை அடுத்த காட்டில், ஒரு வேடன் வாழ்ந்து வந்தான். பறவைகளை அவன் கொல்வதில்லை. உயிருடன் வலையிட்டுப் பிடிப்பான். அவற்றை விற்று அவன் வயிறு வளர்த்தான்.

ஒரு சமயம், தொடர்ந்து சில நாட்கள் அவன் வலையில் பறவைகள் அகப்படாமற் போயின. அவர்கள் வீட்டின் அடுப்பைக் கோழி கிளறத் தொடங்கிற்று. வேடன் மனைவி அவனை இடித்துரைத்தாள். "இன்று உன்னோடு நானும் வருகிறேன். ஏனென்றால், வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை. இன்றைக்கு முதலில் எந்தப் பறவை அகப்பட்டாலும், அதை விற்க முடியாது. அதையே உணவாகச் சமைத்து உண்ண வேண்டும்” என்றாள்.

வேறு வழியில்லாமல், வேடன் இணங்கினான். இருவரும் விடியற் காலமே காட்டுக்குப் புறப்பட்டார்கள்.

ஒரு

முற்பகலிலேயே அன்று அவர்கள் கையில் பச்சைக்கிளி சிக்கிற்று. அது மற்ற கிளிகளைவிடச் சிறிதாகத்தான் இருந்தது. ஆனால், அது அழகாய் இருந்தது. “எவ்வளவு அழகான பறவை. ஆயினும் இது மிக மிகச் சிறிது. ஒருவர் வயிற்றுக்குக் கூடப் பற்றாது”என்றாள் மனைவி.