பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

II.

அப்பாத்துரையம் - 35

அரசன் உள்ளம் கிளியிடம் அப்போதே தாவிற்று. அவன் பொன்னை உடனே வேடனுக்குத்

பத்தாயிரம் ஆணையிட்டான்.

தர

வேடன் வறுமை ஒழிந்தது. வேடன் மனைவியின் உள்ளமும் வீடும் குளிர்ந்தன.

கிளியுடன் பேசுவதே அன்றுமுதல் மன்னன் பொழுது போக்காயிற்று. எந்தக் கேள்விக்கும் அது நகைச்சுவையுடன், நயமான, அதேசமயம் அறிவார்ந்த விடை அளித்தது. அரசியரிடமும் அது சில சமயம் பேசிற்று; ஆனால், அவர்களுக்கு அதன் பேச்சுப் பிடிக்கவில்லை. ஏ னென்றால், அவர்கள் பேச்சுகளைவிட, மன்னன் கோக்கிளியின் பேச்சையே மதிக்கத் தொடங்கினான்.

கிளியை ஒழித்து அரசன் வாழ்வில் முழு இடம் பெற அவர்கள் சமயம் பார்த்திருந்தார்கள்.

ஒருநாள் அரசன் வேட்டைக்குச் சென்றான். வேட்டை முடிந்து திரும்ப இரண்டு நாட்கள் இருந்தன. ஆகவே, போகும் போது, கிளியைப் பாதுகாத்து வரும்படி மனைவியரிடம் கூறிவிட்டுச் சென்றான்.

மனைவியரிடம் ஒரே ஒரு நற்பண்பு இருந்தது! அவர்கள் ஒற்றுமையுடன் இருந்தார்கள். "கிளி பேசும் கிளி. அறிவும் சூழ்ச்சித் திறமும் உடைய கிளி. ஆகவே, நல்ல திட்டமிட்டுத்தான் ஒழிக்கவேண்டும்" என்று அவர்கள்

அதை

கொண்டார்கள்.

பேசிக்

கடைசி இளவரசி திட்டம் கூறினாள். “எல்லாரும் ஒருங்கே கிளியிடம் செல்வோம். 'எங்களில் யார் முதல்தர அழகி? யார் கடைசித்தர அழகி?' என்று கேட்போம். அதன் அறிவு இங்கே பயன்படாது. யாராவது ஒருத்தியைக் கடைசித் தர அழகி ஆக்கத்தான் வேண்டும். யாரைக்கடைசி அழகி என்ற கூறுகிறதோ அவள் அதன் கழுத்தை முறித்துவிட வேண்டும்" என்றாள் அவள்.

"சரியான கருத்துரை! அரசர்கூட இதைக் குற்றம் கூற முடியாது. அப்படியே செய்வோம்" என்று மற்ற அரசியர் அமைந்துரைத்தார்கள்.