பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

அப்பாத்துரையம் - 35

என்று அவன்

மேலும்

அரசன் வியப்பெய்தினான். 'பணிமகள் அழகு இதுவானால்,

தலைவி

எவ்வாறிருப்பாள்?'

மலைப்படைந்தான்.

பணிநங்கை, சிதறிய பொற்கடலைகளைக் கவனித்தாள். ஆர்வத்துடன் அவற்றைப் பொறுக்கி எடுத்தாள். அவற்றை ஓடோடிச்சென்று தன் தலைவியிடம் காட்டினாள்.

சி

இளவரசி இலஞ்சி கடலைகளைக் கையிலேந்திப் பார்த்துக் கொண்டே வந்தாள். சிதறிக் கிடந்த இடங்களைக் கூர்ந்து நோக்கினாள். பின்னும் பல கடலைகள் அடுத்தடுத்துத் தென்பட்டன. அவற்றை எடுத்துக் கொண்டே முன்னேறினாள். சிறிது தொலை வந்தபின், அவள் கால்கள் முன்னேறாது தயங்கி நின்றன.

ஆயினும் பொற்கடலைகள் அவள் கண்களைப் பறித்தன. அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரையும் காணவில்லை. ஆகவே, துணிந்து மரத்தடிவரை வந்து கடலைகளைப் பொறுக்கினாள்.

கிளி, இப்போது அரசன் காதில் பேசிற்று: 'அரசே! இவள்தான் இலஞ்சி இளவரசி. இப்போது விழிப்பாயிருங்கள். அரசி மரத்தடியில் கடலையைப் பொறுக்கக் குனிந்ததும், ஓசைபடாமல் இறங்கிப் பின்னால் செல்லுங்கள்; அவளைத் தூக்கிக் குதிரை மீது வைத்துப் பறந்து செல்லுங்கள். நானும் உடன் வந்து விடுவேன்.

66

'குதிரையைக் கடல் வந்தவுடன் மட்டும் ஒரு தடவை தட்டுங்கள். மீட்டும் மறந்து அடித்து விடாதீர்கள்” என்றது.

ஒன்றிரண்டு கணத்தில் இவையாவும் நடைபெற்றன. அரசியுடனும் கிளியுடனும் மன்னன் குதிரைமீது வானில் பறந்து சென்றான்.

கடலடி வந்ததும் மன்னன் குதிரையைத் தட்டினான். அது கடல் கிழித்துப் பாய்ந்தது.

நடுக்கடலில் இலஞ்சிக்குத் தலை சுற்றிற்று. அவள் தலை அரசன் தோள்மீது குழைந்தது. அச்சமயம் கிளியின் எச்சரிக்கையை அரசன் சற்று மறந்தான். குதிரையை விரைவு