பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

35

அவர்களது அன்றைய நிலையில், அந்த ஆயிரம் பொன் சேதாம்பலுக்கு ஒரு சிறு செல்வமாகத் தென்பட்டது. அவள் மகிழ்ச்சி தெரிவித்தாள்.

மருதவேலி மாணிக்கத்தை முதலில் தலையில் அணிந்தாள். பின் கழுத்தில் அணிந்தாள். இறுதியில் அதைக் காதில் அணியும் எண்ணம் அவளுக்கு எழுந்தது. ஆனால், இரண்டு மாணிக்கங்கள் இதற்குத் தேவைப்பட்டன. அவள் மறுபடியும் தந்தையிடம் ஓடினாள்."அப்பா, இதற்கு ணையாக இன்னொன்றும் வாங்கிக் கொடுங்கள் அப்பா, இரண்டையும் நான் இரண்டு காதுகளிலும் அணிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றாள்.

"புதல்வி பெண்ணாய்ப் பிறக்காமல், ஆணாய்ப் பிறந்திருக்கக் கூடாதா?” என்று இளநாகன் உள்ளுக்குள் எண்ணிக் கொண்டான். ஆனால், இதை அவன் வெளியிட்டுக் கூறவில்லை. மணிவேலை மீண்டும் வரவழைத்தான்.

"அன்புள்ள இளைஞனே! நீ முன் கொடுத்தது போன்ற மாணிக்கம் வேறு இருக்கிறதா? என் புதல்விக்கு இன்னொன்று தேவைப்படுகிறது” என்று மன்னன் கேட்டான்.

ளைஞன் முன்போலவே எளிய மேளாப்புடன் பேசினான்: “அரசே, என்னிடம் இருந்தது ஒன்றுதான்; அதைக் கொடுத்துவிட்டேன். ஆனால், தங்களுக்கு வேண்டுமானால், சிறிது முயற்சியின் மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டுவர முடியும்; அவை நடுக்கடலில் ஏராளமாகக் கிடக்கின்றன” என்றான்.

"இளைஞன் ஏதோ ஏழை இளைஞனல்லன்; தெய்வீக இளைஞனாய் இருக்க வேண்டும்” என்று மன்னன் எண்ணினான். அவன் குரலில் காரியம் நிறைவேற்றத்துக்குரிய மதிப்பினும் மிகுதியான கனிவு காணப்பட்டது.

"இளைஞனே, எனக்குக் கட்டாயமாக அவை வேண்டும். அவற்றுக்காக என்ன விலை கேட்டாலும் கொடுப்பேன். அவற்றைப் போய்ப் பெற்றுத் தரும்படி வேண்டுகிறேன்” என்றான்.

ளைஞன் மீண்டும் தாயிடம் ஓடிச் சென்றான். மன்னனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதிபற்றிக் கூறினான்.