பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

அப்பாத்துரையம் - 35

“அழகு மிக்க இளைஞனே! இங்கே எப்படி வந்தாய்? இங்கே நிற்காதே. பரமசிவனுக்குத் தப்பினாலும் தப்பலாம். இந்த நீர் அரக்கனுக்குத் தப்ப முடியாது.ஓடிப்போ” என்றாள்.

66

"அழகுப் பிழம்பே! உன்னை மறந்து நீ என் வகையில் கவலை கொள்ள வேண்டாம். நான் இறக்க அஞ்சவில்லை. பிழைத்தோடுவதானால் உன்னுடன் ஓடுவேன். இங்கிருந்து சாவதைவிட, உன்னுடன் ஓடமுயன்று சாவதில் கேடில்லை. புறப்படு” என்றான்.

அவன் துணிச்சல் அவளுக்குச் சிறிது தெம்பளித்தது. அவன் அவள் கரங்களைப் பற்றினான். அவளுக்கும் துணிச்சல் எழுந்தது. அவளைக் கொடிபோல் தன்னுடன் இணைத்த வண்ணம் அவன் மீண்டும் சடை முடியைப் பற்றி இறங்கினான். படகைச் சுழியோரத்துக்குச் செலுத்தினான்.

படகு மீண்டும் சுழலின் வழிப்பட்டது. ஆனால், இத்தடவை அது எதிர் திசையில் மேல் நோக்கிச் சுழன்றது. புழைவழியில் அது மேலெழுந்தது. மேற்சுழலில் மீண்டும் சுழன்று எழுந்தது. இத்தடவை, மணிவேல் மாணிக்கக் குமிழிகளைக் காணவில்லை. அவன் தன் அருகிலுள்ள மங்கையைத் திரும்பிப் பார்த்தான். அவள் கழுத்தில் இன்னும் ஒரு செவ்வரை இருந்தது. அது மெல்ல மெல்ல மறைந்து வந்தது.

“மங்கையே, உன் பெயரென்ன? விவரமென்ன?" என்று

கேட்டான்.

“என்னை ஆளவந்த அழகரே! என் தலைவெட்டுண்டு எத்தனை ஊழிகள் ஆயினவோ அறியேன். என் தாய் விண்மங்கை; என் தந்தை மண்செல்வன்; இருவரையும் விட்டு என்னைப் பிரித்தான் நீர் அரக்கன்; அவனை நான் மணந்துகொள்ள இணங்கவில்லை; அவன் உடலைக் கிழித்து அதனுள் ஒளிந்தேன்; ஆனால், அவன் அறிதுயில் உருக்கொண்டு என் உடலைப் பிளந்தான்; நூறாயிரம் ஆண்டுக்கு ஒரு தடவை தங்கக் கழியால் என்னை இணைப்பான். “மணம் செய்ய விருப்பமா?" என்பான். மாட்டேன் என்றவுடன். வெள்ளிக்கழியால் மீண்டும் உடல் வேறு தலைவேறு ஆக்குவான். இது என் கதை.”