பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

66

39

'முன் நான் ஒன்றுபட்டுத் தொண்ணூற்றொன்ப தாயிரத்துத் தொண்ணூற்றொன்பது ஆண்டுகள் ஆய்விட்டன. நீங்கள் வர ஓர் ஆண்டு பிந்தியிருந்தால், நீங்கள் இறந்திருக்க வேண்டும்.நான்...”

மணிவேல் அவளைப் பேசவிடவில்லை. "மாணிக்க மங்கையே! இனி அந்த உலகம் போய் விட்டது. அதோ பார் மேலே, உன் தாய்! இதோ பார், அருகே கீழே, உன் தந்தை! அவர்கள் சான்றாக, இனி நீ என் இணையறா எழில் துணைவி. உனக்கு இனிக் கவலை கிடையாது” என்றான்.

மாணிக்க மங்கையுடன் அவன் தன் அன்னையிடம் சென்றான். மாணிக்கங்களில் ஒன்பதை இளவரசிக்கு அனுப்பினான்.

இளவரசி உள்ளம் மாணிக்கத்தைத் தாண்டி மணிவேலை அணுகிற்று. மன்னன் அவனையும் அன்னையையும் விருந்திற் கழைத்து, இளவரசியை ஏற்று நாடாள வேண்டினான். மாணிக்க மங்கையின் கருத்தறிந்த பின், அரசன் இளநாகன் விருப்பத்தை மணிவேல் ஏற்றான்.

மாணிக்க மங்கையின் கதை கேட்ட மருதவேலி அவளைக் கண்டு அஞ்சுவதா அல்லது அணைப்பதா என்று தயங்கினாள். ஆனால், மாணிக்க மங்கையே அவளை அணைத்துக் கொண்டாள். “அதெல்லாம் நானும் அவரும் ஒருங்கே கண்ட கனவு. நீ இரண்டையும் நனவாக்கினாய்?" என்று அவள் கூறிப்பேச்சை மாற்றினாள்.

மாணிக்க

மாணிக்கங்களில் சிலவற்றுடன் அவன் அன்னையைத் தந்தையிடம் அனுப்பினான். பின் அவனும் மங்கையுடன் சென்று, தந்தை கண்குளிரத் தமையன்மாருடன் அளவளாவினான்.

நீர் அரக்கன் என்ன ஆனான் என்பதுபற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால், அவனே பவளப் பாறையின் உருவில் கடலெங்கும் படர்ந்து மாணிக்க மங்கையைத் தேடி வருவதாகக் கடல் அலைகள் மாணிக்க மங்கைக்கு எச்சரிக்கை தந்தன.