பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

II.

அப்பாத்துரையம் - 35

அரசன் மூன்றாவது மகனை அழைத்தான். “மருதா! நீ ஒன்றுமே கொண்டு வரவில்லையா?" என்று கேட்டான்.

மருதன் பாசிபடிந்த மூட்டையை நீட்டினான்.

அரசனுக்குக்கூட வெறுப்பு ஏற்பட்டது. அதைக் கையில் தொடாமல் தன் கைப்பிரம்பாலேயே தட்டி வீச எண்ணினான். னால், அரசனுக்குரிய கடமையுணர்ச்சி அவனைத் தட்டி எழுப்பிற்று. அவன் ஒரு பணியாளை அழைத்து அதை அவிழ்க்கும்படி கூறினான்.

முடிச்சு பூசணிக்காய் அளவே இருந்தது. ஆனால், அவிழ்க்க அவிழ்க்க அது சிறிதாகிக் கொண்டே வந்தது. வரவர, மூட்டையின் தோற்றம் உயர்ந்து கொண்டே போயிற்று.

மாங்காயளவுக்கு வந்தவுடன், அது பட்டாலும் பொன் நூலாலும் பின்னப்பட்டதாயிருந்தது. நெல்லிக்காய் அளவு சிறுத்த உருவில் அதில் ஒரு முத்துச் சிமிழ் இருந்தது.

அதனுள் இருந்த மென்துகில் நிலவைப் பழித்த மென்மையும், வானவில்லைப் பழித்த மென்னிறங்களும் உடையதாக இருந்தது. அது விரிக்க விரிக்க அகன்று நூறு முழு அளவாயிருந்தது. ஆனால், மடிக்க மடிக்கச் சுருங்கி அரசன் கணையாழிக்குள் எளிதில் அடங்கிற்று.

ஏளனம் செய்த அண்ணன்மார்கள் ஏளனத்துக்கு ஆளாயினர். மன்னன் மருதனை ஆர அணைத்துக் கொண்டான். “பெறுதற்குரிய இச்செல்வத் துகிலை எங்கே பெற்றாய்?" என்று அரசன் அதன் நலம் பாராட்டினான்.

ன்.

அரசன் தன் இரண்டாவது தேர்வைத் தொடங்கினான். இப்போதும் அவன் மூன்று மாதங்கள் தவணை தந்தா ஆனால், இத்தடவை கோரிய பொருள் முன்னிலும் அருமையானதாக இருந்தது.

CC

“ஒரு விளாங்காய்க்குள் அடங்கத்தக்க அழகிய சிறு நாய் ஒன்றைக் கொண்டுவரவேண்டும்” என்று அவன் பணித்தான்.

முன்போலவே மூத்தவர் இருவரும் ஆரவாரத்துடன் சன்றனர். மருதன் தனியாகச் சென்றான். வரும்போது