பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

47

ஒவ்வொருவரும் வகை வகையான சிறு நாய்களை ஏராளமாகக் கொண்டுவந்தனர்.

ஆனால், மருதன் இப்போது முன்னிலும் சிறிது நம்பிக்கையுடன் தவளையிடம் பேசினான். அது குட்டைக்குள் சென்று தேங்காயளவு பருமனுள்ள ஈயப்பேழை ஒன்றைத் தந்தது.

"பேழையை மெல்ல உடைக்க வேண்டும். அடுத்தடுத்து இருக்கும் மென்பேழைகளை இன்னும் மென்மையாக உடைக்க வேண்டும். கடைசிப் பேழையின் மீது ஊதினாலே போதும்; அது திறந்து கொள்ளும்" என்று தவளை கூறிற்று.

மூத்தவர் இருவர் கொண்டுவந்த பலவகை நாய்களின் அழகு அரசனையே கவர்ந்தது. தன் கட்டுப்பாட்டை அவர்களுக்காகக் கூடிய மட்டும் தளர்த்த எண்ணினான். ஆகவே, தன்னாலான வரை பெரிய விளங்காய் ஒன்றையே அவன் தருவித்திருந்தான். அதன் தோடுகள் இரண்டாகப் பிளந்து சிமிழாக்கப்பட்டிருந்தன.

அரசன் எவ்வளவு முயன்றும் நாய்களின் தலைகள்கூட விளங்காய்க் குள் நுழையவில்லை.

அண்ணன்மார்

இத்தடவை

மருதனை ஏளனம் செய்யவில்லை. பொறாமையுடனும், வெறுப்புடனும் நோக்கியிருந்தனர். ஆனால், விளங்காயில் அடங்கத்தக்க நாயை அவர்கள் கொண்டுவர முடியவில்லை யானாலும், தந்தை தங்கள் மீது மகிழ்வு கொண்டுள்ளார் என்பதை அவர்கள் அறிந்தார்கள்.

‘மருதன் இத்தடவை தோற்றுவிடத்தான் போகிறான்' என்று அண்ணன்மார் இருவரும் ஆவலுடன் எதிர் பார்த்தனர்.

அரசனும் மிகுதி நம்பிக்கையற்ற தொனியில் மருதனை நோக்கினான். "எங்கே, உன் நாயைக் காட்டு, பார்க்கலாம்?' என்றான்.

மருதன் தன் சட்டைப் பையிலிருந்த ஈயப் பேழையை எடுத்து மெல்ல உடைத்தான். உள்ளே ஒரு செம்புப் பேழையும், அதனுள்ளே வெள்ளிப் பேழையும், பொன் பேழையும் இருந்தன. இவை கடந்து முத்துப்போலப் பளபளப்பான வாதுமையளவான சிமிழ் இருந்தது. அவன் அதை ஊதினான்.