பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

அப்பாத்துரையம் - 35

யாவரும் வியக்கும் வண்ணம் சிமிழின் தோடு பறந்தது. ஒரு பெரிய வண்டு என்ற கருதத்தக்க அளவில், ஒரு சின்னஞ்சிறு நாய், யாவரும் கேட்கத்தக்க சில்லிட்ட குரலில் குரைத்துக் கொண்டு நின்றது.

அரசன் விளங்காயைத் திறந்தான். அது தானாகவே அதற்குள் குதித்து, உடலை அதற்குள் அடக்கி முடக்கிப்படுத்துக் கொண்டது.

மருதன் ஓர் இளவரசனல்ல; ஒரு மாயாவியே என்று மன்னன் மருண்டான். ஆனால், அந்தச் செல்வச் சிறு நாயிடம் அவன் உள்ளம் அவனையும் அறியாமல் சென்றது.

ஆயினும், மூன்றாம் தேர்வு மூத்த புதல்வர்களுக்கு உதவியாய் இருக்க வேண்டும் என்பதில் மன்னன் மிகவும் அக்கரை காட்டினான்.

"குழந்தைகளே! இதுவரை நான் கேட்ட பொருள்கள் கிடைத்தற் கரியவை. அத்தகைய பொருள்களை இனித் தேட வேண்டியதில்லை. மூவரும் அவரவர்க்குரிய ஓர் இளவரசியைத் தேடிக் கொண்டு வாருங்கள். யார் கொண்டுவரும் இளவரசி அழகில் சிறந்தவளாக இருக்கிறளோ, அவனுக்குத் தான் ஆட்சியைத் தருவேன்" என்றான் அரசன்.

மூத்தவர் இருவரும் மகிழ்ந்தனர். ‘செல்வ ஆரவாரத்தில் பழகிய தாங்களே இத்தடவை வெல்ல முடியும்' என்ற இறுமாப்புடன் அவர்கள் சென்றனர்.

மருதன் இத்தடவை முன்னிலும் கிளர்ச்சியற்றவனாகவே இளவரசியையும் கொண்டுவர விரும்பவில்லை. தேனிலந்தையைத் தவிர வேறு எவரையும் எண்ணவே அவன் மனம் இடம் தரவில்லை.

சென்றான். ஏனெனில், அவன்எந்த

அவன் சோர்வுகண்டு தவளை வியப்படைந்தது. “என்ன செய்தி? இளவரசே!” என்று கேட்டது.

அவன் செய்தியை எடுத்துரைத்தான். "இத் தடவை உன்னால் உதவவும் முடியாது. உதவினாலும் நான் ஏற்கப்