பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

அப்பாத்துரையம் - 35

நீரடியில் நீரில்லை. ஒரு மணி நேரம் மூச்சு அடக்கி நீரைத் துளைத்துச் சென்றபின், நீருக்குள் ஒரு புதிய உலகம் போல வெளியிடம் தெரிந்தது. நீரெல்லை கடந்தவுடன் அவர்கள் அதில் விரைந்து சென்று விழுந்தார்கள். ஆனால், கீழே விழுந்த இடம் கொடி தழை நிறைந்து மெத்தென்று இருந்தது. விழுந்த அதிர்ச்சி எளிதில் நீங்கிற்று. அவர்கள் எழுந்து பூங்காவைச் சுற்றிப் பார்த்தார்கள்.

குளத்தின் அடித்தளம் முழுவதும் பூங்கா பரந்திருந்தது. ஆனால், குளத்தின் அடி கடந்து பாதைகள் நிலத்தடியில் சென்றன. அவர்கள் அதைப் பின்பற்றினர். அங்கே அவர்கள் ஒரு பெருநகரையே கண்டனர். ஆனால், நகரில் ஆள்கள் இல்லை. உயிரினங்கள் இல்லை. மேன்மேலும் வியப்புடன் அவர்கள் எங்கும் சுற்றினர். எல்லா இடங்களும் கலையழகு நிறைந் திருந்தது. அதை நுகர்பவர்களை மட்டிலும் எங்கும் காணவில்லை. ஆனால், பாரிய ஓர் அரண்மனையின் ஒரு பகுதியிலே எழில்மிக்க ஒரு நங்கை துயில்வதை அவர்கள் கண்டார்கள்.

மானவேல் பரபரப்பு முழுவதும் அந்த எழில் உருவத்தைக் கண்ட வுடன் அடங்கிற்று. அவன் கண் கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அது அணிந்திருந்த ஆடைகள் மெல்லிய நுரைகள் போன்றிருந்தன. வானவில்லின் நிறங்கள் நுரையில் நிழல்படுவதுபோல, அவை ஏழெழில் வண்ணமாக இலங்கின. எழிலுருவின் உடல் வெண் பளிங்கினாலும் சலவைக் கல்லாலும் கடைந்திழைத்த பதுமை போன்றிருந்தது.

ஆனால், பதுமையில் காணாத உயிர்க்களையும் உயிர்ப் பொலிவும் அவ்வுருவில் மிளிர்ந்தன. நுண்ணிய செவ்வண்ண அலைகளும், நீல வண்ணத் திரைகளும் அதில் நெளிந்து அதன் அழகைப் பெருக்கின. அதன் ஒவ்வொரு மென் மூச்சிலும் உடல் முழுதும் அலை எழுந்தெழுந்தமிழும் நடுக்கடல் பரப்புப்போல எழுந்தெழுந்து அடங்கிற்று. மூடிய கண்ணிமைகளின் அழகே திறந்த கண்ணின் அழகுக்கு ஓர் அறைகூவல்போலத் தோன்றிற்று. மானவேல் நிலைகண்டு வான்மதி புதுக் கவலையுற்றான்.

எழில் உருவம் உண்மையில் ஒரு நீர் நங்கை. அவள் பெயர் செம்மலர்த்தாள். அவள் சுற்றத்தாரனைவரும் கடலகத்தின் ஆழத்தில் பவளப்பாறை களிடையேதான் வாழ்ந்தார்கள். அவள்