பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

57

தந்தை நிலவுலகிலிருந்து வந்த ஒரு நாகன். இக் காரணத்தால் மற்ற நீர் நங்கைகளைப்போல, அவள் உடல், பாதி மீனாய் இருக்கவில்லை. அறைக்குக் கீழே, மீன் வாலுக்கு மாறாகக் கால்களே இருந்தன! அது கண்டு நீர் மைந்தரும், நீர் மகளிரும் வியப்புற்றார்கள். சிவந்த மலர் போன்ற தாள்கள் உடையவள் என்று அவர்கள் அவளுக்குப் பெயரிட்டார்கள்.

நிலவுலகக்

கால்களுடன் அதற்குரிய நிலவுலக மனப்பான்மைகளும் அவளிடம் இருந்தன. அவள் நீந்துவதற்கு மாறாக நடப்பதில் மிகுதி அவாவுடையவளாயிருந்தாள். அதுவும் கடலடியில் பவளப்பாறைகளில்

அமையவில்லை.

நடப்பதுடன்

அவள்

கடற்கரையிலும், ஆற்றங்கரையிலும் நெடுந்தொலை நடக்க விரும்பினாள். தாயும் சுற்றாத்தாரும் அவள் விருப்பங்களை முழுதும் தடுக்க முடியவில்லை; தடுக்கவுமில்லை. இதன் பயனாக, அவள் அடிக்கடி நீரெல்லை தாண்டி நெடுந்தொலை நடந்தாள்.

செம்பாம்பு வடிவிலிருந்த பூதம் அச்சமயம் அவளைக் கண்டது. அது அவளை விழுங்கவில்லை. அவளை மணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் அது அவளைக் அவளைக் காட்டுக் குளத்துக்குக் கொண்டு வந்திருந்தது. நீரினடியில் தன் மாயத்தால் அது ஒரு பூங்காவை உண்டாக்கிற்று. அதில் அவளைச் சிறைப்படுத்திற்று.

அவள் விரும்பினாலல்லாமல் செம்பாம்பு அவளை மணம் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால், ஒரு பெண்ணின் விருப்பத்தாலேயே அது அழகிய மனித உருஎடுக்கும் ஆற்றல் பெற்றிருந்தது. நாள்தோறும் அது வெளியே சென்று இரை தேடிற்று. அவளுக்கும் உணவு கொண்டு வந்தது. நாள்தோறும் வகைவகையான உணவாலும் உரையாடலாலும் அவளை மகிழ்வித்தது. அவள் விருப்பம் பெற முயன்றது. அனால், அவள் மனம் செம்பாம்பைக் கணவனாக ஏற்க என்றும் இசையவில்லை.

செம்பாம்பு நாள்தோறும் காலையிலேயே இரைதேடி மீண்டது. அந்த நேரத்திலேயே செம்மலர்த்தாளும் கண் விழிப்பது வழக்கம். அம்முறையில் அன்று அவள் கண்விழித்தாள். விழித்தவுடன் அவள் அஞ்சி நடுங்கினாள்; வாய் குளறினாள். தம்மைக் கண்டுதான் அஞ்சுகிறாள் என்று மானவேலும்