பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அப்பாத்துரையம் - 35

இருக்கும் சமயம் பார்த்து, அவர்களை அவனுக்குக் காட்டினாள். ‘ஒன்று உனக்குரிய பெண், இளவரசன் எழுமுடியின் தங்கை. மற்றது இளவரசனை மணக்க இருக்கும் நீர்நங்கை. இருவரும் மணக் கோலத்தில் இருப்பதைப் பார்! இப்போது அவர்களுடன் நீ பேசி விடப்படாது. மணமான பின் ஒருத்தி உன் மனைவி. ஒருத்தி உன் தங்கை. அப்போது இருவருடனும் நீ பேசலாம்” என்றாள்.

மாயாண்டியாக நடித்த வான்மதி அவர்களைக் கண்டு தாயைச் சுற்றிவந்து கும்மாளமடித்தான். ஆனால், தாய்,வீட்டுக்கு அவனைத் திரும்பி அழைத்தபோது, அவன் போக மறுத்தான். 'நான்வேறு எங்கும் போகமாட்டேன், அம்மா! இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பேன். அப்போதுதான் எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கும்” என்றான்.

66

தாய், அவன் போக்கில் அவனை விட்டுவிட்டாள். கடிந்து காண்டால் எங்கே பழையபடி ஓடி விடுவானோ என்று அஞ்சினாள்.அத்துடன் நேரில் பெண்ணைப் பார்ப்பதால், அவன் ஓடி விடாதிருக்க ஒரு தூண்டுதலும் இருக்கும் என்று

எண்ணினாள்.

அரண்மனையில் நல்ல பாதுகாப்பு இருந்தது. வான்மதி பித்தன் போல எங்கும் திரிந்தான். அவன் போக்குகளை அறிந்த காவலர் படிப்படியாக அவனைக் கண்டிப்பதை நிறுத்தினர். அவன் ஒரு சமயம் செம்பாலை அறை அருகே சென்று மீளுவான். இரவில் பலதடவை வெளியே போவான்; வருவான். இந்தப் போக்கு வரவு அவர்களுக்குப் பழக்கமாய்விட்டதால், அதை யாரும் சட்டை செய்யவில்லை.

செம்மலர்த்தாள் பெயருக்குத்தான் நோன்பிருந்தாள். தன் கள்ளமற்ற ஆர்வ அவா தன்னை இவ்வளவு பெரிய இக்கட்டில் கொண்டு தள்ளிவிடும் என்று அவள் எண்ணவில்லை. ஆனால், இப்போதுஎன்ன எண்ணியும் பயனில்லை என்று அவள் கண்டாள்; தன்னைத்தானே அவள் ஓயாது நொந்து கொண்டாள். தப்பி ஓட எப்போதாவது வழி கிடைக்குமா என்று அவள் சிந்தித்த வண்ணம் இரவெல்லாம் விழித்திருந்தாள். பகலெல்லாம் சிந்திய மூக்கும் அழுத கண்ணுமாய், அரையுறக்கத்துடன் நாட்களைக் கழித்தாள்.