பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ஆராவமுது

செம்மொழி என்று ஒரு பாணன் இருந்தான். அவன் குரல் மிக இனிமையானது. அழகாகப் பாடும் திறனும் அவனிடம் அமைந்திருந்தது. கடவுளிடம் அவனுக்குப் பற்று மிகுதி. நாள் தோறும் தன்பாட்டால் அவன் கடவுளை வழிபட்டு வந்தான்.

மற்றப் பாணர்களைப்போல அவன் செல்வரையும், ளங்கோக்களையும் பாடவில்லை. ஆகவே, அவனுக்கு எத்தகைய பரிசும் கிடைக்க வில்லை. வறுமையிலேயே அவன் நாள் கழித்தான். அவன் மனைவி சேயிழைக்கு இந்த வறுமை வாழ்வைப் பொறுக்க முடியவில்லை. "கடவுளைப் பாடினால் நம் வறுமை எப்படித் தீரும்? ஏதாவது ஒரு மன்னரைப் பாடிப் பொருள் பெற்று வாருங்கள்” என்று அவள் கூறினாள். அவனுக்கு ஒன்றிரண்டு நாளைக்குப் போதிய உணவு மூட்டை கட்டிக் கொடுத்து அனுப்பினாள்.

அவன், எந்த அரசரையும் பாட விரும்பவில்லை.கடவுளைப் பாடிக் கொண்டே காட்டு வழிகளில் அலைந்தான்.

நடுக்காட்டில் ஓர் அம்மையப்பன் கோயில் இருந்தது. அது நீண்டநாள் ஆளற்றுப் பூசையற்றுக் கிடந்தது. செம்மொழி உணவு உண்டு நெடுநாளாயிற்று. அவன் சுனையில் நீராடி, சுனையின் நீரால் அம்மையப்பனுருவுக்குத் திருமுழுக் காட்டினான்.சில காய்கனிகளைப்பறித்துவந்து,அம்மையப்பனுக்குப்

படைத்தான்.பின்,

“அம்மையும் அப்பனும் நீ இருக்க அண்ணலே யாரைநான் பாடிடுவேன்! மெய்ம்மையில் மன்னனாய் நீ இருக்க வேறெந்த மன்னரை நாடிடுவேன்!

=