பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

71

‘மண்ணாலான ஓர் உண்கலத்தில் ஏன் இவ்வளவு கவலை?’ என்று விடுதிக்காரன் வியப்படைந்தான். அவன் அதை எடுத்துப் பார்த்தான். அதை நாற்புறமும் திருப்பினான். தற்செயலாகவே அவன் அதைக் கவிழ்த்துப் பார்க்கவும் நேர்ந்தது. வெறுமையாயிருந்த கலத்திலிருந்து புதிய கட்டமுதுகொட்டிற்று. கவிழ்த்து வைத்திருக்கும்வரை கொட்டிக் கொண்டே இருந்தது. நிமிர்த்தவுடன் கலம் வெறுங்கலமாயிற்று. இது து கண்டு விடுதிக்காரன் அதிர்ச்சியுற்றான்.

தன் விடுதியில் இத்தகைய கலம் ஒன்றிருந்தால் போதுமே! வேறு செல்வமோ, வேலையாளோ தேவைப்படாது என்று அவன் எண்ணினான். அவன் பேராசை அவனை வஞ்சனை செய்யத் தூண்டிற்று. அவன் அந்தக் கடவுட் கலத்தை மறைத்து வைத்தான். அதுபோன்ற மற்றொரு கலத்தை அந்த இடத்தில் வைத்தான். அத்துடன் அந்தக் கலத்திலிருந்து செம்மொழி உணவு நாடும்படி அவன் விடவில்லை. தானே உணவு கொண்டுவந்து காடுத்தான்.

சூதறியாத செம்மொழி, கலத்தைக் கவிழ்த்துப பார்க்க எண்ணவில்லை. விடுதிக்காரன் கொடுத்த உணவை உண்டான். போலிக் கலத்துடன் புறப்பட்டான்.

டு வந்து சேர்ந்ததும் மனைவி, “இத்தனை நாள் எங்கே போய் விட்டீர்கள்? எந்த அரசரைப் பாடினீர்கள்? என்ன பரிசு கிடைத்தது?” என்றாள்.

அவன் அம்மையப்பன் தந்த பரிசின் கதை கூறினான். மனைவி உள்ளூரச் சிரித்தாள். “இப்படிப்பட்ட பைத்தியத்திட மிருந்து எப்படித்தான் நான் காலங் கழிக்கப் போகிறனோ?” என்று தனக்குள் கூறிக் கொண்டாள். ஆயினும், அவனுக்கு அறிவு புகட்ட எண்ணி, “ஏன் இப்போது கலத்தின் உணவையே நீங்கள் உண்ணலாமே?" என்று கேலி செய்தாள்.

அவன் “இதோ பார்" என்று ஆத்திரத்துடன் கலத்தைக் கவிழ்த் தான்.

கலத்திலிருந்து உணவு வரவில்லை.

அவன் வியப்படைந்து திகில் கொண்டான்.