பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

அப்பாத்துரையம் - 35

ஆனால், மனைவி கேலி செய்தாள். “இந்தக் கதைகளால் மனைவியைத்தான் ஏமாற்ற முடியும். வேறு யாரை ஏமாற்ற உங்களுக்கு அறிவு இருக்கிறது?" என்றாள்.

அவன் எதுவும் பேசவில்லை. விடுதிக்காரனிடம் சென்றான். விடுதிக்காரன் பிடிகொடுக்கவில்லை. "நீ கொண்டு வந்த கலத்தைத் தானே எடுத்துக் கொண்டு போனாய்?" என்றான்.

விடுதிக்காரன் வேலையாளை நீக்கியதும், திடீர்ச் செல்வனானதும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், ஓர் ஏழைக்காகப் பரிந்து ஒரு செல்வனைப் பகைத்துக் கொள்ள யாரும் விரும்பவில்லை. இரக்கமுடைய ஒன்றிரண்டு பேர் மட்டும்,“அரசனிடம் செல்வது தானே, உனக்கு வழி பிறக்கக் கூடும்” என்றார்கள்.

அரசரைப் பாடவிரும்பாத அவன், அரசரிடம் சென்று முறையிடவும் விரும்பவில்லை. அவன் மீண்டும் காடுகரைகளில் அலைந்தான். அம்மையப்பன் கோயிலிலேயே சரணடைந்தான்.

முன்போல் அவன் நாள்தோறும் குளித்து வழிபாடாற் றினான். முன்போலப் பாடினான்.

66

“அம்மையும் அப்பனும் நீ இருக்க

பொய்ம்மை உலகில் பரவுவதேன்? மெய்ம்மையில் அன்புடன் நான் இருக்க மீளவும் துன்பம் விராவுவதேன்?'

என்று அவன், காடுங் கனிவுற இரங்கிப் பாடினான். மாயச் சித்தர் ஒருநாள் அவன் பாட்டைக் கேட்க நேர்ந்தது. அவர் உள்ளம் மீண்டும் நெகிழ்ந்தது. அவர் இத்தடவை மற்றோர் உண்கலத்தை அவன் அருகே வைத்தார். இது மண்கலமாய் வெள்ளிக்கலமாய் இருந்தது.

ல்லை

நீ

"அன்பனே, பொய்ம்மையற்ற மெய்ம்மையை அவாவுகிறாய்.பொய்யாத மற்றொரு செல்வம் உனக்களித்தேன். இதைக் கவிழ்த்தால் பொங்கல் அமுதமே வரையாது ஒழுகும்; தை முன்போல் அசட்டையாக எங்கும் வைக்காமல் வீட்டுக்குக் கொண்டு செல்" என்று அவர் மறைவுருவாகக் கூறினார்.