84
று
அப்பாத்துரையம் - 36
வாளை எடுக்க நானும் முயன்று பார்க்கிறேன்," என்றான். அவன் அழுக்கடைந்த ஆடையைக் கண்டு "இவன் எங்கே வாளை இழுக்கப் போகிறான்” என்று அவள் நினைத்தாளானாலும் “முயன்றுதான் பாரேன்,” என்று அசட்டையாகக் கூறினாள். ஆனால் பலின் அவள் வியக்கும்படி எளிதாய் அதைத் தன் கையால் இழுத்தெடுத்து விட்டான்.
வாள் அணிந்த மங்கை அவனை அரசரும் பிறரும் இருந்த இடத்துக்கு இட்டுச் சென்று "இவன் உங்கள் அனைவரையும் விடச் சிறந்த வீரன்; இவனையும் மேடை வீரருடன் வீரனாக ஏற்றுக் கொள்,” என்றாள்.
இயற்கையிலேயே பெருந்தன்மை வாய்ந்த ஆர்தர் எளிதில் அவனை மன்னித்து அங்ஙனமே ஏற்றுக் கொண்டார்.
மங்கை அதன் பின் பலினிடம் தன் வாளைத் திரும்பத் தன்னிடமே கொடுக்கும்படி கேட்டாள். பலின் “அது இனி எனக்கே உரியது; அதனை யாருக்கும் தர மாட்டேன்," என்று கூறிவிட்டான். மங்கை “உன் நன்மைக்காகவே அதனைத் தரும்படி கேட்டேன். ஏனெனில், நீ யாரை மிகுதியாக நேசிக்கிறாயோ அவர்களையே அது கொல்லும்,” என்று எச்சரித்துவிட்டுச் சென்றாள்.
வாள் அணிந்த மங்கை கூறியது பொய்க்கவில்லை. இறுதியில் அவ்வாள் பலின் உடன் பிறந்தான் பலான் உயிரைக் குடித்து அவன் உயிருக்கும் இறுதி கண்டது.
66
இவற்றுக்கிடையே பலின் செய்த அருஞ்செயல்கள் பல. அவனிடம் முன் இருந்த வாளுடன் மங்கையிடமிருந்து கைக்கொண்ட மாயவாளும் இருந்ததனால அவனை மக்கள் "இரட்டை வாய் வீரன்" என்றழைத்தனர். இத்துடன் அவன் இடர்களுக்குள் துணிச்சலாகக் குதிப்பவன். ஆதலால், அவனை மக்கள் “துணிகர வீரன் பலின்” என்றும் கூறினார். அவன் புகழ் நாலா பக்கமும் பரந்தது.
ஒருநாள் பலின் குதிரைஏறிகாட்டு வழியே அருஞ் செயல்களை நாடிச் சென்றான். அப்போது காட்டின் நடுவே ஒரு மாளிகை தென்பட்டது. அதனை நோக்கி அவன் செல்லுகையில் வழியில் ஒரு நெடிய சிலுவை மரம் நின்றது. அதன் குறுக்கு