பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

அப்பாத்துரையம் - 36

போரிட்டதில்லை. நீ யார் என்று நான் அறியலாமா?” என்று கேட்டான். பலான், “நான் பலினின் உடன் பிறந்தான் பலான். இத்தீவில் முன் காவல் செய்த வீரனைக் கொன்று அவனிடத்தை அடைந்தேன்” என்றான். பலின் "அந்தோ! நம் தீவினை இருந்தவாறு! நானே உன் உடன்பிறந்தான் பலின். இந்த வாளைக் கொடுத்த மங்கை கூறிய எச்சரிக்கையை அசட்டை செய்ததனால் என் உடன் பிறந்தானையே கொல்லும்படி நேரிட்டது,” என்று மனமாழ்கினான்.

பலினும் பலானும் ஒருங்கே இறந்தனர். இருவரும் ஒரே கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் வாழ்க்கையின் உள்ளுறை முற்றிலும் அறிந்த மெர்லின் அவர்களை அடக்கம் செய்த இடத்தில் ஒரு வீரக் கல் நாட்டி அதில் அவர்கள் உருக்கமான வரலாற்றைப் பொறிக்கும்படி செய்தான்.

அடிக்குறிப்புகள்

1.

Sir Balin

2. Maiden with the sword