பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

89

வறுமை, கீழ்மை வஞ்சம் ஆகியவற்றை எளிதில் கண்டு கொண்டது. ஆயினும் அறிவுக்கன்றி அன்புக்கு அவ்வளவு இடம் இதுவரை ஏற்பட்டிராத அவன் மனம் அவள் குழந்தை நடிப்பிலும் அரைகுறை மழலைச் சொற்களிலும் ஈடுபட்டது. அவன் தன் மாயத்தால் பெண்களையும் குழந்தைகளையும் களிப்பூட்டத்தக்க சிறிய வித்தைகள் சிலவற்றை அவளிடம் பொழுது போக்காகக் காட்டினான். அவற்றைக் கண்டு மிகவும் களித்து வியப்பவள் போலப் பாசாங்கு செய்த விவியன் அவனை இன்னும் ஊக்கி மேன்மேலும் பலவகை வித்தைகள் காட்டும்படிக் கூறினாள். அவ்வப்போது பேச்சை இவ்வித்தை களின் பாலும் மாயமந்திரங்களின் பாலும் திருப்புவாள். அப்போது ஒவ்வொரு சமயம் அவன் தன்னை மறந்து பலவகைப் புதுப்புது வகையான மாயங்களைப் பற்றிப் பேசுவான். அவற்றுளொன்று, பிறரை வசப்படுத்திச் செயலற்றுப் போகும்படி செய்வது. இதைப்பற்றிக் கேட்டது முதலே விவியனின் விளையாட்டு நடிப்பிடையே வெற்றி நடிப்புக்கணப் போதில் கருக்கொண்டு வளைந்து வளர்ந்தது. எப்பாடுபட் டாவது இவ்வொரு வித்தையைக் கற்றுக் கொண்டு விட்டால் கற்பித்த ஆசிரியனாகிய அவனை நடைப்பிணமாக்கி ஆர்தரின் நோக்கங்களை நிறைவேற்றி வைக்கும் வலக்கையாகிய அவனை ஒழித்து விடலாம் என்று அவள் எண்ணினாள். இவ்வெண்ணத் துடன் அதுபற்றி அடிக்கடி பேசி அதனை அவன் வெளியிடும்படி வற்புறுத்தலானாள்.

கு

விளையாட்டு மிஞ்சிவிட்டது எனக் கண்டு மெர்லின் பேச்சை மாற்றி மறைக்கப் பார்த்தான். பின் அவளுடன் பேசுவதையே நிறுத்திப் பார்த்தான். ஆனால் அவன் மாயத்திலும் தன் மாயத்தை அவள் பரக்க விரித்து முற்றுகை யிடுவது கண்டதே அவன் அவளறியாமல் அவளைவிட்டு விலகி வெளிநாடு சென்றான். ஆனால், விவியன் அவன் போக்கு முற்றிலும் மறைந்திருந்து கவனித்து அவனறியாமல் அவனைத் தொடர்ந்தாள். இருவரும் தம்மிடத்திலிருந்து நெடுந்தொலை விலக்கிக் காட்டிற்குச் சென்றபின் மெர்லின் மனதயர்ந்திருக்கும் சமயம் பார்த்து அவள் அவன்முன் சென்று, “நான் சிறு பிள்ளை என்று நினைத்து இப்படி ஏமாற்ற வேண்டாம்" என்றும், ஆண்டில்

66

ளையளாயினும் அன்பில் முதிர்ச்சியுடைய