பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. லான்ஸிலட்டும் ஈலேயினும்

பிரிட்டனின் பேரரசரான ஆர்தர் கார்ன்வாலை யடுத்த லையானிஸ்' என்ற நாட்டில் வாழ்ந்து வந்த தம் வளர்ப்புத் தந்தையாகிய ஆண்டன் பெருந்தகை மாளிகைக்குச் சென்று தம் (வளர்ப்பு) உடன்பிறந்தாருடன் பொழுது போக்கியிருந்தார். ஒருநாள் அவர் தாம் இளமையில் திரிந்த காடுகளில் சென்று நெடுநேரம் உலாவினார். உச்சி வேளையாயிற்று. ஆயினும் எதிர் காலக் கனவுகளிலாழ்ந்து கால் சென்ற வழியே சென்றதனால் அவர் வழிதப்பி அதற்கு முன் நெடுநாள் மனிதர் கால்படாத ஒரு குன்றின் அருகே வந்து விட்டார். அக்குன்றில் ஒரு காலத்தில் ஓர் அரசனும் அவன் உடன் பிறந்தானும் நாட்டின் அரசிருக்கைக் காக ஒருவரை ஒருவர் பின்பற்றி போரிட்டுக் கொண்டே சென்றனர். போனவர் இருவருள் ஒருவர்கூட மீண்டு வரவில்லை. இருவரும் ஒருவர் வாளுக்கு மற்றவர் ஒரே சமயத்தில் இரையாய் விட்டதாகக் கூறப்பட்டது. அக்கொடியர் இருவர் உயிர்களும் பேயாய் நின்று ஒருவரை ஒருவர் அதட்டி வந்ததாக மக்கள் கூறலாயினர். ஆகவே, அவ்விடத்தில் இரவிலன்றிப் பகலில் கூட யாரும் செல்வதில்லை.

ஆர்தர் இக்கதையைக் கேட்டிருந்தாரானாலும் தாம் செல்லும் அக்குன்றுதான் அது என்பது அவருக்குத் தெரியாது. தெரிந்தாற் கூட அச்சம் என்பதே இன்னது என்று அறியாத தூய வீரனாகிய அவர் பின்னிடைந்திருப்பார் என்று சொல்வதற் கில்லை. மற்றும் தீக் குணங்களாகிய அகப்பேய் உள்ளத்திருந்தால் அல்லவோ புறப்பேய்கள் அணுகும். அரசர் குன்றையெல்லாம் சுற்றிப் பார்த்தபின் அதன் சாரலில் ஓர் அழகிய ஏரியைக் கண்டு அதனை நோக்கி இறங்கி வந்தார். அப்போது அவர் காலிற் பட்டு ஏதோ ஒன்று நொறுங்கிற்று. அவர் குனிந்து அது யாதென்று நோக்க அது நெடுநாள்