சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
93
வெயிலாலும், மழையாலும் கிடந்து இற்றுப் போன ஒரு மனிதனின் எலும்புக் கூடு என்று கண்டார். (அது உண்மையில் நாம் மேற்கூறிய அரசன் எலும்புக் கூடே) அவ்வெலும்புக் கூட்டினின்று ஆர்தர் கவனத்தை இன்னொரு ஓசை ஈர்த்தது. எலும்புக் கூட்டிலிருந்து பளபளப்பான வளையம் போன்ற ஏதோ ஒன்று உருண்டு உருண்டு சென்றது. ஆர்தர் அதன் பின் ஓடிப்போய் அதனை எடுத்துப் பார்த்தார். அதுவே இறந்த அரசன் மணிமுடி அதில் ஒன்பது வைரமணிகள் பதித்திருந்தன. தன்னலமில்லாத் தகையாளரான ஆர்தர் அவ்வுயர்ந்த பொருளை உயரிய முறையில் நாட்டுக்குப் பயன்படுமாறு செய்ய எண்ணி ஆண்டுதோறும் தம் வீரரையும் நாட்டில் உள்ள பிறரையும் போட்டிப் பந்தயங்களிலீடுபடுத்தி வெற்றி பெற்றவர்க்கு அம்மணி முடியின் வைரமணிகளை ஒவ்வொன்றாகப் பரிசளித்தார்.
பெற்று,
எட்டாண்டுகளாக லான்ஸிலிட்டே போட்டியில் வெற்றி எட்டு மணிகளையும் பெற்றார். அவர் இல்வாழ்விலீடுபடாதிருந்த நிலையில் அவற்றை அரசியிடமே காணிக்கையாகச் செலுத்தியிருந்தார். ஒன்பதாவது மணியையும் அவரே பெறுவார் என்று யாவரும் உறுதிகொண்டிருந்தன.
போட்டி விழா நாளுக்கு முந்தின நாள் எல்லாரும் அதற்காகக் காமிலட்டுக்குப் புறப்பட்டனர். அரசிக்கு உடல் நலமில்லாததனால் உடன் போகக் கூடவில்லை. அதுகண்ட லான்ஸிலட் தனக்கும் உடல்நலமில்லை என்று சாக்குக்கூறிப் பின் தங்கினார். அரசர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் பிடிவாத மாக மறுத்து விட்டார். ஆனால் எட்டு மணிகளையும் காணிக்கை யாய்ப் பெற்ற அரசிக்கு ஒன்பதாவதும், எல்லா வற்றிலும் மிகப் பெரிதானதுமான கடைசி மணியையும் ஆரமாக அணிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று. ஆகவே அவள், லான்ஸிலட்டை விழாவிற்குப் போகும்படி வற்புறுத்தலானாள்.
லான்ஸிலட்: அம்மணி இப்போது நான் என்ன செய்யட்டும்? அரசர் கூறிய போது பிடிவாதமாக மறுத்துவிட்டு இப்போது போனால் அவர் மனம் எப்படியாயிருக்கும்?
அரசி: இதுவா பெரிய தடை? அதற்கு எளிதில் நான் வகை சொல்லித் தருகிறேன். “எல்லாரும் என்னை லான்ஸிலட்