94
அப்பாத்துரையம் - 36
என்றறிந்து வெற்றியை எளிதில் விட்டு விடுகிறார்கள். இதனால் இகழுரைக்கும் அவமதிப்புக்கும் இடம் ஏற்படுகிறது. ஆகவே ஆளுடை தெரியாத வகையில் மாற்றுருவில் வந்து போட்டியிட எண்ணினேன்" என்று சொல்லிக் கொள்! அதற்கேற்பக் கேடயத்தையும் மாற்றிக் கொண்டு செல்க.
லான்ஸிலட், சரி என்று புறப்பட்டார். ஆளடையாளம் அறியாமலிருக்கும்படி லான்ஸிலட் நேர்வழி விட்டுச் சுற்று வழிகளினூடாகச் சென்றார். அதில் வழி தவறி எங்கு வருகிறோம் என்று தெரியாமலேயே ஒரு மாளிகையுள் நுழைந்தார். அங்கிருந்த ஒரு கிழவர் அவரை வரவேற்று உள் அழைத்துச் சென்றார். அம்மாளிகை ஆஸ்டொலட் மாளிகை என்பது; அதன் தலைவரே அக்கிழவர். அவருக்கு டார்3 லவேயின் என்ற இரு புதல்வரும், அல்லி மங்கை என்றழைக்கப்பட்ட ஈலேயின்‘ என்ற புதல்வியுமுண்டு. லான்ஸிலட் உள் நுழைந்தபோது அவர்கள் யாரோ ஒருவர் பேசிய துணுக்குப் பேச்சைக் கேட்டுக் கலகலவென்று அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
4
5
லான்ஸிலட் பெருந்தகை தனக்கு அவ்விடம் புதியதாகவும் ஆட்கள் புதியவராகவும் தோற்றவே அதனைப் பயன்படுத்தித் தன் பெயரை மறைத்துக் கொண்டார். அதோடு தான் ஆளடையாள மறியாமல் விழாவுக்குச் செல்ல விரும்புவதால் கேடயத்தை அங்கேயே வைத்து விட்டு, வேறு கேடயம் கொண்டு போக விரும்புவதாகவும் அவர் கோரினார். டார்ப் பருந்தகை முதல் ஆண்டுப் போட்டி விழாவில் காயமுற்றுப் போரில் கலக்க முடியாமல் போய்விட்டதால் அவன் கேடயம் லான்ஸிலட்டுக்குக் கொடுக்கப்பட்டது.
லான்ஸிலட் சற்று ஆண்டு சென்றவராயினும் ஆஸ்டோலட் குடியின் செல்வக் குழந்தையாகிய ஈலேயின் மனத்தில் அவர் மீது பேரார்வம் ஏற்பட்டது. அவளைக் குழந்தை என்ற முறையில் லான்ஸிலட் தங்கை போல் பரிவுடன் பாராட்டியதை அவள் தப்பாகப் புரிந்து கொண்டாள். தன் இளங் குழந்தை மனத்தில் அவர் மீது கொண்ட பற்றதலுக்கு அவள் நீர்வார்த்து அதனை வளர்த்து வந்தாள். பெண்கள் தாம் விரும்பிய தலைவருக்கு அல்லது உறவினர்க்கு விழாவிலணியத்