சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
95
தம் கைக்குட்டையைக் கொடுப்பது வழக்கம். அவளும் அதன்படி லான்ஸிலட்டுக்குத் தன்கைக் குட்டையைக் கொடுத்தாள். லான்ஸிலட் கினிவீயருக்கு முன் கொடுத்த உறுதிமொழியை எண்ணி, நான் இது வரை எந்த மங்கையின் அறிகுறியையும் அணிந்ததில்லை என்றார். உடனே அவள் திறம்பட, “அப்படியாயின் இப்போது என் அறிகுறியை அணிந்த பின் உம்மை யாரும் அறவே அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்றாள். அது உண்மையே என்று கண்டு லான்ஸிலட் இணங்கினார். வற்புறுத்தி வழக்காடிப் பெற்ற அவ்வெற்றியைக் கூட அப்பேதை தன் காதலின் வெற்றி எனக் கொண்டாள்.
போட்டி விழாவில் லான்ஸிலட் மற்றோர் புதிய வீரனென்று அவர் உறவினரும் நண்பரும் நினைத்தனர். தம் லான்ஸிலட்டின் புகழைக் கொள்ளை கொள்ள இவன் யார் என்று தருக்கி அவர்கள் போட்டியில் அவர் வெற்றி பெறும் போதெல்லாம் அவரை வெறிகொண்டு ஒற்றுமையுடன் தாக்கினர். அப்படியும் "தோலா" வீரரான லான்ஸிலட்டே வெற்றிக் கொண்டாராயினும் பலநாள் உயிருக்கு மன்றாடும் நிலையில் படுகாயப் பட்டார். வெற்றியறிகுறியாகிய மணியைக் கூடப் பெறாமல் ஈலேயினுடன் பக்கத்திலுள்ள ஒரு துறவியின் மடத்தில் சென்று தங்கினார்.
லான்ஸிலட் இங்கே இங்ஙனம் இருக்க, ஈலேயின் ஆஸ்டொலாட்டில் லான்ஸிலட்டையே எண்ணி எண்ணித் தன் மனக்கோயிலில் அவர் உருவை வைத்து வழிபடலானாள். அவர் பெயரை அவள் அறியாவிட்டாலும் ஆர்தர் வட்ட மேடையில் அவரே முதன்மை வாய்ந்த வீரராய் இருக்க வேண்டும் என அவள் உறுதியாக நம்பினாள். தன்னிடம் விட்டுப் போன கேடயத்தை அவர் காதலுக்கு அறிகுறி என எண்ணி அதனை அவள் ஓயாது எடுப்பதும் துடைப்பதும் அதிலுள்ள மூன்று அரிமாக்களின் படத்தைப் பார்த்து அவரைப் பற்றி மனக்கோட்டைகள் கட்டுவதுமாயிருந்தாள். அக்கேடயம் அழுக்குப் படாமலிருக்க அவள்தன் சிறந்த பொன்னாடை ஒன்றைக் கொண்டே அதற்கு உறை செய்து அதில் அவர் கேடயத்தின் படங்களைத் தீட்டிப் பூவேலைகளைச் செய்து மிணுக்கினாள். இங்ஙனம் நொடிகளை யெல்லாம் ஊழிகளாகக்