96
அப்பாத்துரையம் - 36
கழித்து நாட்கள் பல சென்றதால் அவள் மனத்துக்குள், ‘அவர் வெற்றியடைந்தாரா? ஏன் வரவில்லை,' என்றெல்லாம் கவலை கொண்டாள்.
லான்ஸிலட்டோ
என்று யாவரும் எண்ணும்படி வியக்கத்தக்க முறையில் வெற்றிப்பெற்ற புதிய வீரனைப் பாராட்டி ஆர்தர் அவருக்கு மணியை அளிக்க எண்ணி அவரை அழைத்துப் பார்த்தார். புதிய வீரர் மணியைப் புறக்கணித்துச் சென்றதும் அவர் உயிருக்கே மோசமான நிலையில் படுகாயமடைந்து கிடந்தார் என்று கேட்டதும் அவர் ஆர்வத்தைப் பின்னும் மிகைப்படுத்தின. உரிமைப்படி எப்படியும் மணியை வெற்றிப் பெற்றவருக்குக் கொடுத்தாக வேண்டும் என்றெண்ணிய ஆர்தர், தம் சிற்றப்பன் பிள்ளையாகிய கெவெயினிடம் அதைக்கொடுத்து எப்படியும் புதிய வீரரைக் கண்டுபிடித்து அதைக் கொடுத்து அவரைப் பாராட்டி வருமாறு அனுப்பினார்.
கவெயின் பல இடங்களிலும் சுற்றித் திரிந்து புதிய வீரரைக் காணாமல் ஓய்ந்து தற்செயலாக ஆஸ்டொலட் வந்தார்.ஈலேயின் ஆவலுடன் போட்டி விழாவின் முடிவென்ன என்று கேட்டாள். ஆளடையாளமற்ற புதிய வீரர் ஒருவர் வெற்றி பெற்றாரென்று கேட்டதே அவள் மகிழ்ச்சிப் பெருக்கால் தனக்கு அவர் மீதே காதலென்பதையும், அவர் கேடயம் தன்னிடமே இருந்தது என்பதையும் வெளியிட்டுக் கூறி அக்கேடயத்தையும் காட்டினாள். கவெயின் அதன் மூன்று அரிமாக்களைக் கண்டு, ‘ஆ! நான் எண்ணியது சரி; இது லான்ஸிலட்டன்றி வேறன்று,' என்றார். ஈலேயினும், “நான் எண்ணியதும் சரி; என் தலைவர் ஆர்தர் மேடையில் முதன்மை வாய்ந்த வீரரே," என்றாள். கவெயின் சோம்பேறியாதலால். “பின்னும் லான்ஸிலட்டைத் தேடவேண்டிய தில்லை,” என்று மணியை ஈலேயினிடமே கொடுத்தார். அத்துடன் அவரிடம் “நாரதர்” பண்பும் சற்று
ருந்ததால் லான்ஸிலட்டுக்கு ஒரு காதலி ஏற்பட்டு விட்டதை அரண்மனை எங்கும் பறைசாற்றிக் கினிவீயரிடமும் கூறிவிட்டார்.
அரசியாகும் பேரவாவால் கினிவீயர் லான்ஸிலட்டைத் துறக்கத் துணியினும் தன்னலமும் தன் போக்கும் மிக்க அவர் மட்டும் தம் காதலொப்பந்தத்தை விடாதபடி அவர் மீது உரிமை