சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
97
செலுத்தி வந்தாள். ஆகவே, அவர் தன்னையன்றி இன்னொரு பெண்ணின் காதலில் ஈடுபட்டார் என்று கேட்டதுமே அவள் அவர் மீது பெருஞ் சினங் கொண்டாள்.
ஈலேயின் லான்ஸிலட் படுகாயமடைந்தார் எ ன் று கேள்விப்பட்டது முதல் ஆஸ்லெடாலாட்டில் அவள் கால் தரிக்கவில்லை. தந்தையிடம் சென்று அவள் தானே அவரைப் பக்கத்திலிருந்து பார்க்க வேண்டுமென்று முரண்டினாள். குடும்பத்தின் ஒரே பெண்ணாகிய அவள் சொல்லை அவள் தந்தையும் சரி, தமையன்மாரும் சரி, என்றும் தட்டுவதில்லை. எனவே, டார் பெருந்தகையுடன் அவள், துறவியின் மடத்துக்கு அனுப்பப்பட்டாள். லான்ஸிலட்டின் நிலைமை கண்டு அவள் மிகவும் கலங்கிப் போனாள். ஆயினும் அவள் காட்டிய பரிவும் களங்கமற்ற பற்றுதலும் காதல் வாழ்வில் முறிவுற்றுச் சோர்ந்த லான்ஸிலட்டின் உள்ளத்துக்குக் கிளர்ச்சி தந்ததனால் அவர் விரைவில் உடல் நலமுற்றார். முற்றிலும் அவள் மீது அவர் காதல் கொள்ள முடியாவிடினும் தன்னலமிக்க கினிவீயரின் கட்டுப்பாடு இல்லாதிருந்ததால் லான்ஸிலட் அவள் காதலை ஏற்று அவளுக்காவது நல்வாழ்வு கொடுத்திருக்கக்கூடும். அது முடியாது போகவே அவள் மனத்தை வேறு வகையில் திருப்பி விடலாம் என்று லான்ஸிலட் அரும்பாடு பட்டார்.
தாம் அவளைத் தங்கையாகவே நேசிப்பதாகவும் அவளை விட மூன்று மடங்கு ஆண்டுடைய தன்னை மறந்து அவளுடனொத்த வேறோர் இளைஞனையே மணக்கும் படியும் அவர் கூறிப் பார்த்தார். ஒன்றும் பயனில்லாமல் போகலாயிற்று. அவள் தந்தையும் உடன் பிறந்தாரும் கூடக் கவலை கொண்டனர். சிறுபிள்ளைத்தனமான சிறு விருப்பத்தை நயமாகப் பேசி முறிப்பதை விடக் கடுமையாக நடப்பதாலேயே எளிதில் முறித்தல் கூடும் என்று லான்ஸிலட்டிடம் அவள் தந்தை கூறினார். அதன்படி லான்ஸிலட் மற்றெல்லாரிடமும் விடைபெற்றுச் செல்லும் போது ஈலேயினிடம் மட்டும் சொல்லாமல் சென்று விட்டார். மேலும் அவர் கேடயத்துக்கு அவள் அரும்பாடு பட்டுத் தைத்த உறையை எறிந்து விட்டுக் கேடயத்தை மட்டுமே கொண்டு போனார்.
லான்ஸிலெட்டும் ஈலேயின் தந்தையும் நினைத்தபடி