சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
109
சமயம் முழுவன்மையும் கொண்டு ஒருவர் மீது ஒருவர் வாளை ஓச்சினர்.மாட்ரெட், ஆர்தர் வாளால் இரு பிளவாகப் பிளக்கப்பட்டு உடனே மாண்டான். ஆர்தர் மண்டையுடைந்து வலிமை முற்றிலும் அற்றுப் படுகாயத்துடன் சாய்ந்தார். அவர் நண்பருள் அப்போது பெடிவீயர் ஒருவரே மீந்திருந்தார். அவர் ஆர்தரைத் தம் தோள் மீது தாங்கி ஸாக்ஸனியரால் பெரும்பகுதி அழிக்கப்பட்டுக் கடற்கரையிலிருந்த ஒரு கோயிலில் கொண்டு சென்று படுக்கவைத்தார்.
ஸாக்ஸானியரை நடுங்க வைத்து, ரோமானியரை முறியடித்து பிரிட்டனெங்கும் ஆணை செலுத்தியதுடன் தீமையையே உலகெங்கும் ஒடுங்கும்படி செய்த வீர கோளரியான ஆர்தர், பெடிவீயரன்றி வேறு துணையற்ற நிலையில், போர் வெற்றியிடையேயும் வாழ்க்கையில் சலிப்பும் முறிவுமுற்றுத் தனியே கிடந்தார்.
ஆர்தர் மனம் அச்சமயம் தன் இளமைக் கனவுகள், தம் அரசாட்சி, தம் வீரர் பெரும்புகழ் ஆகிய யாவற்றையும் எண்ணிப் பெருமூச்சுவிட்டது. தன் வலக்கையாயிருந்த லான்ஸிலட்டையும் தம் உயிருக்கு உறையுளாயிருந்த கினிவீயரையும் எண்ணிற்று; இறுதியில் தெய்வீகக் குருதியேந்தி ஒளி வீசித் தம் கண்முன் வந்த கடவுளருளொளி விளக்கமாகிய தெய்வீகக் கலத்தை எண்ணி அதனை நாடிச் சென்று பெற்ற கலஹாட் பெருந்தகையின் பெரும்புகழில் திளைத்தது; பின் அதனைப் பெறு மாற்றலில்லாது மாண்ட, தம் உயிரினும் அரிய வீரரை எண்ணி மாழ்கிற்று; இறுதியில் தமக்குக் கண் கண்ட தெய்வமாயிருந்த மெர்லினை யெண்ணிக் கலங்கிற்று.
7
மெர்லினை எண்ணியதுமே தம் பிறப்புப் பற்றி மெர்லின் கூறிய அருஞ்செய்திகளும் தான் நேரிற்கண்ட அரும்பெருங் காட்சிகளும் தெய்வீகமான திருக்கை ஏரியின் தடத்தில் ஏந்திய எக்ஸ்காலிபரும் அவர் நினைவுக்கு வந்தன. அவர் கண்கள் அவர் முன் கிடந்த எக்ஸ்காலிபரைப் பெருமையுடனும் துயருடனும் நோக்கின. அதன் ஒருபுறம், “என்னை எடுக்க,” என்றும். மறுபுறம் என்னை எறிக,” என்றும் பொறித்த எழுத்துக்களைக் கண்டதே அதனை எறியும் நாள் வந்ததெனக் கண்டு பெடிவீயரிடம், “பன்மணிகள் பொறித்த என் கண்மணி போன்ற இப் பொன்
66