110 ||__ __
அப்பாத்துரையம் - 36
வாள் மனிதர் கையில் படத்தக்கதன்று, இதனை உன் வலிமை கொண்ட மட்டும் கடலில் வீசி எறிந்து விட்டு நீ காணும் காட்சியை வந்து கூறுக,” என்று ஏவினார்.
ய
தலைவன் பணி மாறாது பெடிவீயர் வாளுடன் சென்றான். ஆனால் ஆர்தர் பெருமையனைத்துக்கும் பிற்காலத்தில் ஒரே அறிகுறியாயிருக்கக் கூடும் அவ்வாளை, பல நாட்டரசாட்சி களையும் கொடுத்துக் கூடப் பெற முடியாத பன்மணிகள் பதித்த அப் பொன்னிழைத்த வாளை எறிய அவனுக்கு மனம் வரவில்லை. “ஆர்தர் மனச் சோர்வுற்றிருக்கிறார். வாளை எறிய வில்லை என்று சொன்னால் வருந்துவார். ஆகவே இவ்வொரு வகையில் ஒரு சிறு பொய் சொன்னால் என்ன! நாளை அவர் நலமடைந்த பின் இத்தவறுதலை அவர் மன்னிப்பதுடனல்லாமல் போற்றவும் கூடும்,” என்றெண்ணி அதனைப் புதரில் மறைத்து வைத்துவிட்டு ஆர்தரிடம் வந்து அதனை எறிந்துவிட்டதாகக் கூறினான்.
"
ஆர்தர்: அப்படியா! எறிந்தபோது நீ என்ன கண்டாய்?
ஏழை பெடிவீயர் இக்கேள்வியை எதிர்பார்க்கவில்லை. நீ கண்டதை வந்து கூறு என்ற சொல்லின் குறிப்பையும் அவர் உணரவில்லை. ஆகவே மனக் குழப்பமடைந்து பின் ஆர்தருக்கு ஏற்றபடியே பேச எண்ணி, “நான் கண்டது வேறெதுவுமில்லை. அலைகள் கரையில் மோதுவதையும் எக்ஸ்காலிபர் வீழ்ந்த இடத்தில் குமிழிகள் எழுவதையும் மட்டுமே கண்டேன்!" என்றார்.
ஆர்தர் சினங்கொண்டு, "நான் பிரிட்டனை இழந்தேன். ஆட்சியையும் நண்பரையும், மனைவாழ்வையும் இழந்தேன்.என் இறுதி நண்பன் வாய்மையையும் இழக்கவாவேண்டும்?” என்று வருந்தி, “இச்சிறு பொருளை எண்ணி என் சொல்லை மறுக்கத் துணிந்த நீ இனி யாது செய்யத் துணியாய், பொருளாசை பொல்லாதது,” என்று இடித்துரைத்தார்.
அது பொறாத பெடிவீயர் மீட்டும் வெளிச் சென்று வாளையெடுத்தான். அதன் கண்ணைப் பறிக்கும் மணிகள் அவனுறுதியை மீண்டும் கலைத்தன. “நான் சற்று வழவழ என்று பேசி ஆர்தர் மனத்தில் ஐயத்தை உண்டு பண்ணிவிட்டேன்.இனித் துணிந்து கூறுவேன்,” என்று எண்ணிக்கொண்டு பெடிவீயர்