(112) ||.
அப்பாத்துரையம் - 36
வருவேன். தீமைமிக்க இவ்விருட்காலத்தில் உன்னால் உலகைத் திருத்த முடியாதாயினும் கூட உன்னளவில் முக் காரணங்களும் தூய்மையாக நட. இறைவன் முன்னிலையில் ஆலிவானில் (துறக்கத்தில்) ஒன்று கூடுவோம்,” என்று ஆர்தர் கூறிப் பின் தனக்குச் செய்யும் இறுதி உதவியாகக் கடற்கரைக்குத் தன்னைத் தாங்கிச் செல்லும்படி கூறினார். பெடிவீயருக்கு அவர் சொற்கள் விளங்கவில்லை யாயினும் அவர் கேட்டு கொண்ட படி அவரைத் தூக்கிச் சென்றார். போகும்போது ஆர்தர், காலங்கடந்து விடப்படா தென்று விரைபவர்போலப் பட படத்து “விரைந்து செல்க, நேரமாய் விடும்," என்று முடுக்கினார்.
கடலலைகளின் மீது பெடிவீயர் பேரொளி ஒன்று கண்டான். அதில் சில கரும்புள்ளிகள் தென்பட்டன. சற்று நேரத்தில் அவ் ஒளி அழகு மிக்க பெரியதொரு படகாகவும், புள்ளிகள் அதில் தங்கியிருந்த அரமைந்தரும் அரமங்கை யருமாக மாறின. மங்கையருள் மூவர் இளவரசிகள் போலவும் காணப்பட்டனர். ஆர்தர் தன்னைப் படகில் சேர்க்கும்படி கூறினார், மூன்று பெண்டிரும் அவரை ஏற்றினர். அரசி போன்றிருந்தவள் அவர் தலையை ஆதரவுடன் மடிமீது வைத்து கொண்டு கண்ணீர் வடித்தாள். பின் படகு சிறிது சிறிதாக அகன்று மறையலாயிற்று.
66
பெடிவீயர், "ஐயனே! நான் ஒருவன் தனித்து இவ்வெற்றுலகில் வாழவா?” என்று துயரத்துடன் கேட்டான். ஆர்தர், "அன்பரே! வருந்த வேண்டாம்; என் புண்கள் குணப்பட்டு பிரிட்டனின் கெட்டகாலம் நீங்கிய பின் மீண்டும் வருவேன் இன்றிறந்த வீரர் மீண்டும் எழுவர். அதுவரை நும் கடனாற்றி நாட்கழிக்க. இதுவே இறைவன் அமைதி," என்று கூறியகன்றார்.
படகு ஒரு புள்ளியாகுமளவும் காத்திருந்து பெருமூச்சுடன் பெடிவீயர் திரும்பிவந்து பிரிட்டன் மக்களுக்கு இவ்வரிய வரலாற்றைக் கூறி அவர்கள் கண்களில் பெருமித உணர்ச் சியையும் வியப்பையும் துயரையும் ஒருங்கே ஊட்டினார்.