பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ||

அப்பாத்துரையம் - 36

டேடலஸின் சிற்பத் திறனும் மினாஸின் போராண்மையும் சேர்ந்து, பாஸிடான் கிரீட்டுக்குத் தந்த பழியை அதேன்ஸின் பழியாக்கிற்று. எல்லாரும் விரும்பும் இளமைப் பருவம் அதேனியருக்கு, அச்சத்துக்கும் நடுக்கத்துக்கும் உரிய துன்பப் பருவம் ஆயிற்று. அப்பருவத்தவரும் அதை அணுகுபவரும் எங்கே அடுத்த ஆண்டின் பலிமுறை தம்மீது வருமோ என்று அஞ்சி வாழ்ந்தனர். தேர்வின் அச்சம் ஒருபுறம் எல்லாரையும் கவலையில் ஆழ்த்திற்று. தேர்ந்தபின் தேரப்பட்டவர் உறவினரை மீளாத் துயரம் ஆட்கொண்டது. கலையாரவாரமிக்க அதேன்ஸ் நகரில் கண்ணீரும் கம்பலையும் நிலையாகத் தங்கின.

மினாஸின் புதல்வி அழகிற் சிறந்த அரியட்னே அவள் ஆண்டு தோறும் பலியாக வரும் இளைஞர் நங்கையர் துயர்கண்டு கண் கலங்கினாள்.

அவள் எவ்வளவு

தடுத்துரைத்தும் கெஞ்சியும் மன்னன் தன் பலி முறையை நிறுத்தவில்லை. ஓராண்டு பலியாக வந்தவர் முகங்களுள் ஒன்று, வழக்கத்திற்கு மேல் அவளைக் கவர்ந்தது. அது மற்ற முகங்களைப் போலத் துயரமோ அச்சமோ உடையதாயில்லை. மணமகளைக் காணச் செல்லும் மணமகன் முகம்போல அது மலர்ச்சியுடையதாயிருந்தது.

அரியட்னேயைக் கவர்ந்த அம்முகம் அதேனிய அரசனின் ஒரே புதல்வன் தீஸியஸின் முகமே.

தன் நகர மக்கள் வாழ்வில் துன்பத்தின் சாயலைப் பரப்பி வந்த மினோட்டாரை ஒழித்துவிடத் தீஸியஸ் துடித்தான். அதற்காகத் தனக்கு வயது வரும் காலத்தை அவன் எதிர்நோக்கியிருந்தான். அந்த ஆண்டு இளைஞர்களைத் தேர்ந்து வலுக்கட்டாயமாகச் சேர்க்குமுன் அவன் தானாகவே அதில் ஒருவனாக முன்வந்தான். கிழ அரசர் ஈஜியஸ் தன் ஒரே புதல்வன் இவ்விடருக்கள் சிக்குவதை விரும்பவில்லை. ஆனால், தீஸியஸ் பிடிவாதம் பிடித்தான். “நம் மக்கள் சாக நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்பா, மேலும் நான் மினோட் டாருக்கு இரையாவதற்காகப் போகவில்லை. என்னுடன் வரும் மற்றப் வரும் மற்றப் பதின்மூவரைக் பதின்மூவரைக் கூட நான் ரையாகவிடப் போவதில்லை. நானே முதலில் சென் று, மினோட்டாரைக் கொன்று அவர்களைப் காப்பேன். ஆகவே,