பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

117

அதுவரை நீங்கள் கவலையில்லாமல் இருங்கள். நான் வரும்போதே உங்களுக்கு என் வெற்றியை முன்கூட்டி அறிவிப்பேன். போகும்போது வழக்கம் போலக் கப்பலில் கருங்கொடி பறக்கும். வெற்றியுடன் நான் திரும்பி வந்தால், கருங் கொடியை மாற்றி வெள்ளைக்கொடி பறக்கவிடுவேன்” என்றான் அவன்.

மன்னன் மினாஸும் தீஸியஸின் சய்தியைக் கேள்விப்பட்டு, அவனைத் தடுத்துநிறுத்த முயன்றான். தீஸியஸ் இங்கும் தன் தன்னம்பிக்கையை எடுத்துரைத்தான். “பாஸிடான் அருளால் நான் மினோட்டாரைக் கொன்று விடுவேன்' என்று அவன் வலியுறுத்தினான். பாஸிடானின் சீற்றத்துக்கு அஞ்சி நடுங்கியவன் மினாஸ். எனவே, பாஸிடானின் அருளில் தீஸியஸ் காட்டிய நம்பிக்கை அவன் உள்ளத்தில் சுருக்கென்று தைத்தது. அவன் உடனே தன் கைவிரலிலிருந்து ஒரு கணையாழியைக் கழற்றிக் கடலில் எறிந்து, எங்கே பாஸிடானின் அருளால் இதை எடு பார்ப்போம்" என்றான். தீஸியன் உடனே கடலில் குதித்து அதை எடுத்துக் கொடுத்தான். அது கண்டு மினாஸின் பொறாமையும் அச்சமும் உட்பகையும் இன்னும் மிகுதியாயின.

66

பார்த்த உடனே தீஸியஸிடம் பற்றுக் கொண்ட அரியட்னே, அவன் வீரதீரங்கண்டு அவனிடமே தன்

உள்ளத்தை ஓடவிட்டாள். இத்தகைய வீரனுக்கு மினோட்டாரை எதிர்த்தழிக்கத் தன்னாலான உதவி செய்வதென்றும், அம்முயற்சியில் அவன் உயிருக்கு இடையூறு நேர்ந்தால் தானும் அவனுடனே மாளுவதென்றும் அவள் உறுதி பூண்டாள். அதன்படியே அவள் தீஸியஸை அணுகித் தன் காதலையும் தன் உறுதியையும் தெரிவித்தாள். அழகியாகிய அவள் காதலை ஏற்பது தீஸியஸுக்குங் கடினமாகத் தோற்றவில்லை. ஆனால் மினோட்டாரை அழிக்க அவள் எப்படி உதவ முடியும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் சிரித்தாள்.

"தீஸியஸ், நீ பெரிய வீரன்தான். துணிச்சல் மிக்கவன்தான். ஆனால் மினோட்டாரைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?