(118) ||
அப்பாத்துரையம் - 36
அதை எப்படிக் கொல்லப் போகிறாய்? கொன்றால், அதன்பின் எப்படி மீண்டு வருவாய்?" என்று கேட்டாள்.
தீஸியஸிடம் இவை பற்றிய திட்டம் எதுவும் இல்லை என்பதை அவள் கண்டாள். பாஸிட டானின் அருள் என்ற சொல்லைக் கேட்டு அவள் புன்முறுவல் கொண்டாள்
"அன்பரே, பாஸிடானின் அருள் இப்போது என் வடிவில் உமக்கு வந்திருக்கிறது. அது இல்லாமல் எத்தகைய வீரனும் மினோட்டாரை வெல்ல முடியாது. ஏனெனில், பாஸிடானின் அருட் கட்டளையால் கடலிலிருந்து பிறந்த மினோட்டாரை நிலஉலக வாள் எதுவும் துளைக்காது. நாளைக் காலை நாம் இருவரும் குளித்துப் பாஸிடான் கோவிலுக்குச் செல்வோம். அவர் அருளால் அவர் சிலையருகேயுள்ள வாளை உமக்கு எடுத்துத் தருகிறேன். அதன் பின் மருட் கோட்டம் செல்வோம்” என்றாள்.
அரியட்னே உதவி செய்வேன் என்றது வெறும் காதல் பசப்புரையன்று என்பதைத் தீஸியஸ் கண்டான். ஆனால், பேரிடர் தரும் பணியில் இவ்வாரணங்கை ஏன் இட்டுச் செல்ல வேண்டும் என் று எண்ணினான். அவ் எண்ணத்தை உய்த்தறிந்தவள் போல அரியட்னே மேலும் பேசினாள்;
"சிறைக்கோட்டத்துக்குள் போன பின்தான் என் உதவி மிகுதி தேவை. நீர், மினோட்டாரின் இடத்தைத் தேடித் திரிய வேண்டும். அதில் உம் கவனம் செல்லும். ஆகவே திரும்பி வருவதற்கு வழி தெரிந்து கொள்ள வேண்டிய வேலையை நான் கவனிப்பேன்” என்றாள்.
“அப்படியா? அதற்கு நீதான் என்ன செய்யக் கூடும்? மருட் கோட்டத்திற்குள் நுழைந்தால் வெளியே வரவே முடியாது என்று நாள் கேள்விப்பட்டிருக்கிறேனே?”
"அப்படியானால் என்ன நினைத்து வந்தீர்?”
"மினோட்டாரை ஒழிப்பதுதான் என்
மற்றவற்றை அதன்பின் தானே பார்க்க வேண்டும்."
வேலை.
"உங்கள் வீரத்திற்கு இத்துணிவு நல்ல சான்றுதான். ஆனால் வீரம் மட்டும் இங்கே போதாது. நீர் திரும்பிவர வழி