சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
119
தெரிதல் வேண்டும். அத்துடன் விரைந்து திரும்பி வர வேண்டும். காலதாமதம் நேர்ந்தால், என் தந்தையின் கையில்பட நேரும். மினோட்டாரை ஒழித்தவனை அவர் எளிதில் விடமாட்டார்.'
66
"அப்படியானால் இதற்கு நீதான் வழி சொல்ல
வேண்டும்."
"மருட்கோட்டத்தை அமைத்த சிற்பியின் மூளை பெரிது. ஆனால், உம் காதலால் என் மூளை அதைவிட மிகுதி வேலை செய்துவிட்டது. நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன்.”
தீஸியஸ் மறுநாள் அரியட்னேயுடன் புறப்பட்டுச் சென்று பாஸிடானின் வாளுடன் மருட்கோட்டம் சென்றான். வாயில் கடந்தபின் வழி ஒன்றிரண்டாய், பலவாய், பின் ஒன்றுக்குள் ஒன்றாய் விரிந்து பலபடியாகப் பெருகிற்று. பல நாழிகை இருவரும் வளைந்து வளைந்து சுற்றி நடந்தனர். பாதைகள் பலவிடங்களில் பெரும்பாதைகளைச் சுற்றிச் சென்றன. பல தறுவாய்களில் வந்துவிடத்துக்கே மீட்டும் வந்ததாகத் தோற்றிற்று.
இறுதியில் அவர்கள் ஒரு திறந்த இடைவெளி கண்டனர். பல பாதைகள் அங்கு வந்து சந்தித்தன. எல்லாப் பாதை யருகிலும் மனித எலும்புகள் சின்னாபின்னமாகக் கிடந்தன. மினோட்டாரின் இருப்பிடத்துக்கே வந்து விட்டோம் என்றுணர்ந்து அவர்கள் விழிப்புடன் நடந்தனர்.
ஏதோ ஒரு பாதைவழி அவர்கள் திரும்பினர். அதுவும் சுற்றிச் சுற்றி அவ்வெளியிடத்துக்கே வந்தது.
இங்ஙனம் நெடுநேரம் சென்றபின் ஒரு புதர்மறைவி லிருந்து அச்சந்தரும் உறுமல் கேட்டது. விரைவில் மினோட்டாரின் கோர உருவம் அவர்கள் முன் வந்து நின்று எக்காளமிட்டது.
மினோட்டாரின் உடல் மனித உடலாயிருந்தாலும் பருமனிலும் உயரத்திலும் மனிதனைவிடப் பெரிதாயிருந்தது. தலையும் மிகப் பெரிய காளையின் தலயைவிடப் பெரிதா யிருந்து. அதன் கண்கள் இருட்டில் புலியின் கண்களைவிட