அப்பாத்துரையம் - 36
(128) || பாறுக்காமல் அலறிக் கொண்டு அவர்களைப் பிடித்து நொறுக்க நாலுபுறமும் தடவினான்.கண் தெரியாத நிலையில் அவன் தன் உறவினர்களைக் கூவி அழைத்தான்.கிரேக்கர் என்ன நேருமோ என்று குகையின் மூலைகளில் பதுங்கினர்.
பல சைக்கிளப்ஸ்கள் வெளியே வந்து நின்று, “என்ன பாலிஃவீமஸ், என்ன?” என்று கூவினர்.
66
என்னைக் கொன்றுவிட்டான், என்னைக் கொன்று விட்டான்!" என்று கூவினான் பாலீஃவீமஸ்.
"யார் கொன்றது, கொன்றது யார்?" என்று கடுஞ் சீற்றத்துடன் அவர்கள் கேட்டார்கள்.
"யாருமில்லை, யாருமில்லை” என்றான் பாலிஃவீமஸ்.
என்று
கொன்றது யாருமில்லை என்றால், இரவில் இப்படிக் கூவித் தங்கள் உறக்கத்தைக் கெடுப்பானேன் சைக்கிளப்ஸ் சலித்துக் கொண்டனர். அவன் குடித்து உளறுகிறான் என்று நினைத்து அவர்கள் தங்கள் தங்கள் குகைக்குச் சென்று விட்டார்கள்.
ஒடிஸியஸ் ‘யாருமில்லை' என்ற பெயர் கூறியதன் முழுநகைத் திறத்தைக் கிரேக்கர் அப்போதுதான்
உணர்ந்தார்கள்.
பாலிஃவீமஸுக்கு இப்போது பாறை திறந்திருப்பது நினைவுக்கு வந்தது. அவன் வாயிலை அடைத்து உட்கார்ந்து கொண்டான். வெளியே போகும் ஆடுகளை மட்டும் ஒவ்வொன்றாக மேயச் செல்லும்படி விட்டான்.
ஒடிஸியஸ் ஆடுகளை மூன்று மூன்றாக இணைத்து அவற்றினடியில் ஓரிரு கிரேக்கர்களைக் கட்டி அனுப்பி விட்டான். தானும் இவ்வாறே வெளியே போய் விட்டான்.
கலங்களில் ஏறியபின் கிரேக்கரால் தம் வெற்றிக் களிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள், “வென்றது ஒடிஸியஸடா, ஒடிஸியஸ்; யாருமில்லை என்று இனிச் சொல்லாதே" என்று கூவினர்.