சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
129
கண்டு பின்னும்
பாலிஃவீமஸ் தான் ஏமாந்தது கண்டு கூக்குரலிட்டுக் கொண்டு கடற்கரைக்கு வந்து மலை போன்ற கற்களை வீசி எறிந்தான். மற்ற சைக்கிளப்ஸ்களும் இதற்குள் வந்து அரையளவு ஆழம் கடலில் இறங்கி வந்தும் கல் வீசியும் பார்த்தனர். அவர்கள் அரையளவு என்பது மூன்று நான்கு ஆள் ஆழமாதலால், கிரேக்கர் கலங்களுக்கு அவர்கள் கற்கள் மிகவும் இடையூறு விளைவித்தன. ஒன்றிரண்டு கலங்கள் கவிழ்ந்தன. மீந்தவற்றுடன் உயி உயிரை க் கையில் பிடித்துக்கொண்டு அலைகளைத் தண்டுகளால் உகைத்துக் கொண்டு கிரேக்கர் தப்பிச் சென்றனர்.
ஈயோலஸ் என்ற அரசன் நாட்டிற்குக் கிரேக்கர் சென்றபோது அவன் அவர்களை விருந்தினராக ஏற்று அன்பு காட்டினான்.
ஐயை என்ற தீவில் மனிதரைவிட மிகவும் நெட்டையான ஸிர்கே என்ற மாயப்பெண் இருந்தாள். அவள் மிக இனிமையாகப் பாடுவாள். பாட்டில் மயங்கியவர்களுக்கு வசியமருந்திட்ட இனிய குடிதேறலுங் கொடுத்து, அதன்பின் தன் மந்திரக் கோலால் தட்டி அவர்களை அவள் பன்றிகளாக்கி மகிழ்வாள். கிரேக்கர்களில் முதலில் சென்ற சிலர் இவ்வாறு பன்றியாகி விட்டனர். இதுகண்ட ஒடிஸியஸ் தன் குடித்தெய்வமான ஹெர்மிஸை வேண்டினான். ஹெர்மிஸ் அருளால் மாயத்திலிருந்து தப்பி, ஸிர்கேயிடம் தன் வாள் வலிமையைக் காட்டினான். அவள் அவனுக்கு அடங்கி நட்பாடி, பன்றியான கிரேக்கரை மீண்டும் கிரேக்கராக்கி அனுப்பினாள். கடலகத்தில் இன்னும் ஏற்படக்கூடும் பல இடையூறுகளையும் அவற்றிலிருந்து தப்பும் நெறிகளையும் ஸிர்கே, ஒடிஸியஸுக்குச் சொல்லி உதவினாள்.
கடலின் ஒரு பக்கத்தில் பாறைகளிடையே ஸிரன்கள் என்ற கடலணங்குகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அழகிய உருவமும் இனிய குரலும் உடையவர்கள். அவர்கள் பாட்டு எவரையும் மயக்கவல்லது. ஆனால், மயங்கியவர்களை அவர்கள் பிடித்துத் தின்றுவிடுவர். ஒடிஸியஸ் முன்பே ஸிர்கேயால் இந்த இடையூற்றை அறிந்தவனாதலால், தன் தோழர்கள் காதுகளை மெழுகினால் அடைத்துவிட்டான்.