(130) ||.
அப்பாத்துரையம் - 36
தன்னையறியாமல் தான் பாடலணங்குகளிடம் செல்லாதபடி தன்னைப் படகுடன் கட்டி வைத்துக் கொண்டான்.
பாலணங்குகளைக் கடந்த சில நாட்களுக்குள், விழுங்கு பாறையை அவர்கள் அணுகினர். ஒரு கடலிடுக்கு வழியாகக் கப்பல்கள் வரும்போது, இருபுறமும் உள்ள பாறைகள் வந்து அவற்றை நெரித்து அழித்துப் பின் பழைய நிலைக்கு வந்துவிடுவது வழக்கம். ஒடிஸியஸ் முதலில் ஒரு பறவையை முன்னால் பறக்கவிட்டான்.பாறைகள் நெருங்கிப் பறவையைக் கொன்றது. அதன் பின் பாறைகள் விலகின. இச்சமயம் பார்த்து ஒடிஸியஸ் தோழருடன் வேகமாக அக்கடலிடுக்கைக் கடந்தான்.
மற்றோரிடத்தில் கடலின் ஒருபுறம் ஸில்லா என்ற ஆறு தலை அரக்கன் கப்பல்களை விழுங்கக் காத்திருந்தான். எதிர்ப்புறம் அவனுக்குத் தப்பிச் செல்பவர்களை விழுங்கச் சாரிப்டிஸ் என்ற ஒரு நச்சுச்சுழி காத்திருந்தது. ஆறுதலை அரக்கனுக்குக் கிரேக்கரில் சிலர் இரையாயினர்; சுழிக்கும் சிலர் இரையாயினர். ஆனால், இருபுறமும் அழிவு நடக்கும் நேரத்தில் இடைவழியில் ஒடிஸியஸும் தோழர் சிலரும் தப்பிச் சென்றனர்.
திரினேஸியா என்ற தீவில் அவர்கள் ஓரிரவு தங்கினர். இந்தத் தீவிலுள்ள ஆடுகள் தெய்வீக ஆடுகளாதலால், அவற்றைக் கொன்றால் பெருங்கேடு விளையும் என்று ஸிர்கே எச்சரித்திருந்தாள். ஆனால், ஒடிஸியஸ் உறங்கும்போது கிரேக்கர் ஆடுகளைக் கொன்று தின்றனர். இதன் பயனாகக் கடல் வழி முழுவதும் கொந்தளிப்பாயிற்று. கிரேக்கர் அனைவரும் அதில் மாண்டனர். ஒடிஸியஸ் மட்டும் மிதக்கும் பாய் மரத்தில் தப்பிச் சென்று, காலிப்லோ என்ற தெய்வ மாதின் உதவியால் கரை சேர்ந்தான்.அத் தெய்வமாது ஒடிஸியஸிடம் காதல் கொண்டிருந்ததால், எட்டாண்டாகியும் அவனை விட்டுப்பிரிய மனமில்லாது, அவனைத் தன்னுடன் வைத்துக் கொண்டாள். ஆனால் எட்டாண்டுகளின்பின் ஒடிஸியஸ் வேண்டு கோளுக்கிரங்கி அவள் அவனைத் தன் நாட்டுக்கு அனுப்பினாள்.