பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

அவன்

131

கடைசியாக மீட்டும் ஒரு தடவை ஒடிஸியஸ் கப்பலுடைந்து உயிருக்கு ஊசலாடினான். ஆனால் இங்கும் வெள்ளாடையுடுத்த ஒரு பெண் அவனைக் காப்பாற்றினாள். அவள் அந்நாட்டு அரசன் அல்ஸினஸின் புதல்வி நாசிகா. அவளுதவியும் அவள் தாய் தந்தை உதவியும் பெற்று ஒடிஸியஸ் தன் நாடாகிய இதகா வந்து சேர்ந்தான்.

இதகா வந்து சேர்ந்தும்கூட ஒடிஸியஸின் இடையூறு களுக்கு ஒரு முடிவு வரவில்லை. கிரேக்கரின் குல தெய்வமாகிய அதேனெ அவன் முன் தோன்றி மனைவியை நேரே பார்க்கச் செல்லக்கூடாது என்று தடுத்தது.

கணவன் வரவைக் கணந்தோறும் ஒவ்வொரு கணமாக எண்ணிப் பொறுமையுடன் காத்திருந்தாள் பெனிலோப். கணமும் நாழிகையும், நாளும் வாரமும் மாதமும் ஆண்டும் உருண்டுருண்டோடின. ஆனால், அவள் நம்பிக்கை இழக்கவில்லை. ஆனால் நாட்டு மக்கள் எல்லோரும் நம்பிக்கை இழந்தனர். ஆண்டுகள் பத்தும் எட்டும் சென்றன; அவளை இனி யாரும் மணக்கலாம் என்று எண்ணிப் பல வீரர் வந்து று மொய்த்தனர். அவளால் அவர்களுக்குத் தக்க மறுமொழியும் கூறமுடியவில்லை. தடையும் செய்ய முடியவில்லை. கணவனைத் தவிர எவரைக் கண்டாலும் அவளுக்குள் தோன்றும் தன் கடுஞ் சீற்றத்தையும் தடுக்க முடியவில்லை. இந்நிலையில் எல்லாரையும் தடுத்து நிறுத்த அவள் ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் தன் கணவன் திரும்பி வந்தவுடன் தருவதற்காக ஒரு கைக்குட்டையில் அழகான பின்னல் பூ வேலை செய்து வந்தாள். தன் மறுமணத்துக்காகவே அதைப் பின்னுவதாக அவள் கூறினாள். "இது முடிந்தவுடன் யாரைத் திருமணம் செய்வது என்று உறுதி செய்வேன்" என்று சொல்லி அவள் நாள் கடத்தினாள். ஒவ்வொரு நாள் செய்த வேலையும் இரவு அழிக்கப்பட்டதால் நாட்கள், மாதங்கள் கழிந்தன.

பூ

இறுதியில் கணவன் வராத சீற்றத்தால், அதை முடித்து விட்டாள். பின்னும் அவன் நாட்கடத்தச் சூழ்ச்சி செய்தாள். ஒடிஸியஸின் போர்க் கோடரிகள் பன்னிரண்டை அவள் நிலத்தில் அகல அகல நட்டு வைத்தாள். ஒவ்வொரு கோடரியிலும் ஒரு சிறுதொளை இருந்தது. ஒரே அம்பைப் பன்னிரண்டு