பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

அப்பாத்துரையம் - 36

கோடாரியின் தொளைகளிலும் செல்லுமாறு எய்பவனைத் தான் மணப்பதாக அவள் கூறினாள்.

ஒடிஸியஸ் தவிரவேறு எவராலும் இதைச் செய்ய முடியாது என்பதை பெனிலோப் அறிந்திருந்தாள். எவரும் தன்னை யடையாதபடி செய்யவே அவள் இச் சூழ்ச்சியை வகுத்திருந்தாள்.

ஒடிஸியஸ் இத்தனையையும் கேள்வியுற்றான். ஆண்டுகள் பல ஆனதாலும், பல இன்னல்களுக்குத் தான் ஆளானதாலும், தன்னைத் தன் மனைவி அடையாளம் காண முடியாது என்பதையும் அதேனெ கூறியிருந்தாள். கணவன் தவிர எவன் அவளை அடுத்தாலும் அவள் கடுஞ் சினத்துக்கு ஆளாக வேண்டிவரும். உலகின் எல்லா இடர்களையும் வென்ற ஒடிஸியஸ், பெனிலோப் ஒருத்தியின் சீற்றத்துக்கு அஞ்சினான். ஆகவே, அவன் அவளை மணந்து கொள்ளப் போட்டியிடும் வீரருள் ஒருவனாய்த் தன் மாளிகையில் புகுந்தான்.

முதலில் அவன் மாளிகையின் வாயில்களை எல்லாம் அடைத்து விட்டான். எல்லா வீரரும் அம்பெய்து தோற்றதும் அவன் கோடரிகளினூடாகத் தன் அம்பைச் செலுத்தினான். வீரரெல்லாம் திகைத்து நின்றபோது, அவன் அம்புகள் அவர்கள் மீது பாய்ந்தன. வெளியே கதவுகள் அடைத்திருந்ததால், அவர்கள் ஓட முடியாமல், அடைபட்டு அம்புக்கு இரையாயினர்.

பெனிலோப் இப்போதும் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. தன் கணவனை ஒத்த ஒரு வீரன் எவனோ எங்கிருந்தோ வந்து, தன் நம்பிக்கையைக் குலைத்துத் தன் கையைப் பற்றத் துணிந்து விட்டான் என்று மட்டுமே அவள் கருதினாள். அவள் அடுப்பங்கரையில் கையாடிக் கொண்டிருந்த அகப்பைக் கோலைச் சுழற்றிக் கொண்டு ஒடிஸியஸ்மீது பாய்ந்தாள்.

ஒடிஸியஸ் தன் முழு அறிவுத் திறத்தையும் இப்போது காட்டினான். தான் ஒடிஸியஸின் தூதுவன் என்று கூறி அவள் சீற்றம் தணிந்தபின் மெல்லத் தன் நீண்ட பயணக் கதையைக் கூறித் தானே ஒடிஸியஸ் என்று அறிவித்து முடித்தான். சீற்றம்