இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
133
தணிந்தும் பெனிலோப்பின் ஐயம் அகலவில்லை. அதன்பின் ஒடிஸியஸ் பெனிலோப்பைத் தான் காதலித்த நாள் முதற்கொண்டு தம்மிடையே நிகழ்ந்த ஒவ்வொரு செய்தியையும் கூறினான். இப்போது பெனிலோப் அவனை அடையாளம் கண்டு கொண்டாள். அவள் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. உலகஞ் சுற்றிய வீரனை அவனுக்காக இத்தனை நாள் ஓயாது துடிதுடித்துக் காத்திருந்த கைகள் வளைத்தணைத்துக் கொண்டன.
ஒடிஸியஸின் வீரச் செயல்களையும் வெற்றிகளையும் கிரேக்க உலகம் பாடிப் புகழ்ந்தது.