சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5
உருகப்
பாடவல்ல
ஒருவனாயிருந்தான்.
ஆர்ஃவியூஸும்
137
அவர்களுள்
ஆர்கோநாவத்தின் புகழும், அதன் வீரர்களும் ஜேஸனும் மேற்கொண்ட பெரும் பயணத்தின் புகழும் அவர்களுக்கு முன்னே சென்றிருந்தது. பெண்களே முழுவதும் நிறைந்திருந்த லெம்னாஸ் தீவின் அரசியும், ஸிஸிகஸ் தீவின் அரசனும் அவர்களை வரவேற்று இனிது நடத்தினர்.
ஆயினும் தற்செயலாக வருந்தத்தக்க ஒரு நிகழ்ச்சி பிந்திய தீவில் நிகழ்ந்தது. ஸிஸிகஸ் தீவின் அரசனிடமிருந்து விடைபெற்று அவர்கள் மீண்டபின், புயல் அவர்கள் கப்பலைத் திரும்பவும் ஸிஸிகஸ் தீவில் கொண்டு வந்தது. அப்போது இருட்டாயிற்று; தாங்கள் திரும்பவும் முன்பு விட்டுச் சென்ற தீவுக்கே வந்ததாக கிரேக்கர் அறியவில்லை. தீவிலுள்ள மக்களும் அவர்கள் தம் நண்பர்களென்பதை அறியாமல், யாரோ கொள்ளைக் கூட்டத்தினர் என்று நினைத்துத் தாக்கினர். கடுங் கைகலப்பு ஏற்பட்டது. அதில் தீவின் அரசன் இறந்தான். விடிந்து தன் பிழையை உணர்ந்த கிரேக்கர் மிகவும் வருந்தினர்.
மிஸியா என்ற தீவில் ஒரு நறுநீர் ஊற்றண்டை நீரருந்தச் சென்ற போது, ஜேஸன் தோழருள் ஒருவன் திடீரென மறைந்துவிட்டான். அவனை அவர்கள் எங்கும் தேடியும் காணாமல் திரும்பிச் சென்றனர். நீரூற்றினுள் வாழ்ந்த ஒரு நீரரமங்கை அவன் அழகில் சிக்கி, அவனை உள்ளிழுத்துக் கொண்டது அவர்களுக்குத் தெரியாது.
சில நாட்களுக்குப் பின் அவர்கள் அரக்கரிடையே அமிக்கஸ் என்ற பெயருடைய ஒரு மற்போர் வீரன் வாழ்ந்த பகுதியில் இறங்கினர். அவன் வந்தவர்களுடனெல்லாம் மற்போரிட்டான். அவர்கள் தோற்றால் அவர்களை மரங்களில் கட்டி வைத்து உணவில்லாமல் சாகடித்து வந்தான். கிரேக்கருள்ளும் பலர் இங்ஙனம் கட்டுண்டனர். ஆனால், கிரேக்கருக்குள் பாலிடியூஸஸ் என்ற சிறந்த மல்லன் இருந்தான். தை அமிக்கஸ் எதிர்பார்க்க வில்லை. அமிக்கஸ் தோற்றான். உடனே பாலிடியூஸஸ் அவனைப் பிடித்து மரத்தில் கட்டிவிட்டுப் கிரேக்கரனைவரையும் விடுவித்தான். இதுவரை