பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

139

ஜேஸனும் ஆர்கோநாவத்திலுள்ள வீரரும் கடந்த துறைமுகங்கள் பல. இறங்கி இளைப்பாறிய தீவுகளும் பல. இறுதியில் அவர்கள் காக்கஸஸ் மலைகளுக்கப்பால் சென்று கால்சிஸ் நகரை அடைந்தனர்.

கால்சிஸின் மன்னன் அயதிஸ். அவன் அவர்களை வரவேற்று, "வந்த காரியம் என்ன?" என்று உசாவினான். பொன்மறியின் கம்பிளியை நாடி வந்ததாக ஜேஸன் கூறியதும் அவன் திகைத்தான். "அன்பர்களே! நீங்கள் எத்தனையோ இடையூறுகளைக் கடந்து இறுதியில் அமைதியுடன் வந்து சேர்ந்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால், நீங்கள் இதுவரை கடந்தவை இடையூறுகளல்ல. இனித்தான் உண்மையான இடையூறுகள் தொடங்க இருக்கின்றன. அவற்றைச் சந்திக்கு முன் சென்று விடுங்கள்" என்றான்.

ஜேஸன்

கேட்பதாயில்லை.

அயதிஸ் சொற்கள்

கடுமையாயின. எச்சரிக்கும் முறையிலும் அச்சுறுத்தும் முறையிலும் அவன் அவர்கள் கடக்க வேண்டிய இன்னல்களை எடுத்துரைத்தான். “முதலில் பித்தளைக் குளம்புகள் பூட்டிய காளைகளைக் கொண்டு நீங்கள் ஒரு வயலை உழவேண்டும்; பின் வேதாளத்தின் பற்களை அதில் விதைக்க வேண்டும்; விதைத்த இடத்திலேயே படைக்கலந்தாங்கிய கொடும் பூதங்கள் தோன்றிப் போருக்கு எழும்; அவையனைத்தையும் அழிக்க வேண்டும்; இத்தனையும் செய்தபின்தான் தங்க மயமான கம்பிளியைக் கைக்கொள்ள முடியும்” என்றான் அவன்.

பொன்மறியை நாடிப் புறப்பட்டபின் முதல் தடவையாக ஜேஸன் மனம் இடிவுற்றது. வெற்றி பற்றிய அவன் நம்பிக்கை யார்வம் தகர்ந்தது. அன்றிரவு முழுவதும் அவன் பைத்தியம் பிடித்தவன் போல, அரண்மனையையடுத்த தன் மாளிகைப் புறவாரத்தில் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தான். அவன்முன் அப்போது அழகுமிக்க ஒரு பெண்ணணங்கு நின்றாள். அத்தகைய அழகு உலகில் இருக்குமென்று அவன் அதுவரை கனவு கண்டதே கிடையாது.

அவளும் அதுவரை அவ்வளவு அழகும் வீரக்களையும் ஆணுருவில் இருக்குமென்று கனவுகண்டது கிடையாது.