பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(140 ||

அப்பாத்துரையம் - 36

அவள், மன்னன் அயதிஸின் புதல்வி மீடியா, மாயாவினி யாகிய தன் தாயிடமிருந்து அவள் மந்திரங்கள் யாவும் கற்றுணர்ந்திருந்தாள். அதை அவள் யாருக்காகவாவது பயன்படுத்த வேண்டிவரும் என்று நினைத்ததில்லை. ஜேஸனிடம் அவள் கொண்ட பாசம் அங்ஙனம் அவற்றைப் பயன்படுத்த அவளைத் தூண்டிற்று.

அவள் தன் காதலை அவனுக்குப் புலப்படுத்தி, காதலுக்காகத் தான் அவனுக்கு இவ்வகையில் உதவி செய்து வெற்றிதருவிக்க முடியும் என்று கூறினாள். ஜேஸன் நன்றியுடன் அவள் காதலை ஏற்றான்.

மீடியா அவனுக்கு ஒருவகை நறுநெய் கொண்டு வந்து கொடுத்தாள். அதை உடலில் பூசிக் கொண்டால், நெருப்பு முதலிய எதுவும் உடலைத் தாக்காது. பூதங்களிடமிருந்து தப்பவும் அவள் வகைமுறை கூறினாள். “பூதங்களிடையே ஒரு கல்லை எறிந்துவிடு. பின் அவை ஒன்றுடன் ஒன்று போரிட்டு அழிந்து விடும்" என்று அவள் கூறினாள். ஜேஸன் அவள் கூறியதுபோல உடலில் நறுநெய் பூசிக் கொண்டான். இதனால் பித்தளைக் குளம்பு பூட்டிய தீயுமிழும் காளைகள் இரண்டும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை; அவன் அவற்றை ஏரில் பூட்டி வயலை உழுதான்; பின் வேதாளத்தின் பற்களை எங்கும் விதைத்தான்.

விதை தூவிய இடங்களிலெல்லாம் தூவுமுன் பூதங்கள் படைக் கலங்களுடன் எழுந்து, ஆரவாரத்துடன் ஜேஸன் மீது பாய்ந்தன. ஜேஸன் மீடியாவின் அறிவுரையைப் பின்பற்றி ஒரு கல்லை எடுத்து அவற்றினிடையே வீசினான். ஒவ்வொரு பூதமும் விழுந்த கல்லை அடுத்த பூதம் தன் மீது எறிந்ததாகக் கருதி ஒன்றுடனொன்று போராடி மாண்டன.

ஜேஸன் இப்போது அயதிஸிடம் சென்றான். அவன் கோரியபடி செய்தாய் விட்டபடியால், மன்னனிடமிருந்தே எளிதில் பொன்மறியின் கம்பிளியைப் பெறலாமென்று அவன் நினைத்திருந்தான். ஆனால், மன்னன் அது தொங்கிய மரத்தைக் காட்டி, “அதைச் சுற்றி உறக்கமிலா வேதாளம் காவல் கிடக்கிறது. உன்னால் அதைக் கடந்து சென்று எடுத்துக் கொள்ள முடியுமானால், எடுத்துச் செல்க” என்றான்.