பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

141

உறங்காத வேதாளத்தைக் கடக்கும் வகைதெரியாமல் ஜேஸன் மீண்டும் விழித்தான். இத்தடவை மீடியா அவனுக்கு உதவி செய்யுமுன் அவனிடம் காதலுறுதி கோரினாள். “என்னைத் தவிர இவ்வகையில் யாரும் உதவ முடியாதென்று என் தந்தை அறிவார். ஆகவே உனக்கு உதவி செய்தபின் நான் இங்கிருக்க முடியாது. நீ இல்லாமல் நான் இருந்தாலும் வாழ்வில் பயனில்லை. ஆகவே, என்னையும் இட்டுக் கொண்டு சென்று மனைவியாய் ஏற்றுக் கொள்ளுவதானால் உதவுகிறேன்” என்றாள். ஜேஸன் அவள் கோரியபடி வாக்களித்தான்.

பாவம், அயலின மாதர் மணத்தையோ அயலினத் தாருக்குத் தந்த உறுதியையோ கிரேக்கர் சட்டமும் நீதியும் சிறிதும் மதிப்பதில்லை என்பதை அப்பாவி நங்கை மீடியா அறியவில்லை. அதற்கான தண்டனையையும் அவள் அடையக் காத்திருந்தாள்.

அன்றிரவு மீடியாவும் ஜேஸனும் பொன்மறியின் கம்பிளி தொங்கிய மரத்தை நோக்கிச் சென்றனர். அதைச் சுற்றிக் காத்திருந்த தூங்காத வேதாளம் அலறிக்கொண்டு அவர்களை நோக்கி வந்தது. மீடியா தான் செய்து கொண்டு வந்திருந்த ஒரு பெரிய அப்பத்தைத் தூக்கி அதன்முன் எறிந்தாள். அது அப்பத்தை அடக்க முடியாத ஆவலுடன் தின்றது. சிறிது நேரத்திற்கெல்லாம் அது கண்மூடி அயர்ந்து உறங்கிற்று.

தன்

ஜேஸன் மரத்திலேறிப் பொன்மறியின் கம்பிளியை வெற்றிகரமாக கைப்பற்றி எடுத்துக்கொண்டு தோழர்களுடன் விரைந்து கப்பலில் ஏறினான். மீடியா தான் உயிருக்குயிராய் நேசித்திருந்த தன் தம்பி அப்ஸிர்ட்டஸை மட்டும் எழுப்பித் தன்னுடன் கூட்டிக்கொண்டு கப்பலில் வந்து சேர்ந்தாள். கப்பல் புறப்பட்டது.

ஜேஸனின் இடையூறுகள் இத்துடன் தீரவில்லை. பொன்மறியின் கம்பிளி கையாடப்படுகிறது என்பதைப் பொன்மறியே கனவில்வந்து அரசனிடம் கூறிற்று. அரசன் உடனே எழுந்து ஏவலாட்களை அனுப்பி உசாவினான். கம்பிO பறி போனது உண்மை என்று தெரியவந்ததே, அவனுக்கு மீடியாமீது சீற்றம் பிறந்தது. அவளும் ஜேஸனுடன்