அப்பாத்துரையம் - 36
(142) ||__ ஓடிவிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அது தெரிந்ததும் அவன் விரைந்து கப்பல்களைத் திரட்டிக் கொண்டு ஜேஸன் கப்பலைப் பின் தொடர்ந்தான்.
அரும்பாடுபட்டுத்
66
பிடிபட்டால், தாம் தேடிய பொன்கம்பிளியை இழக்க வேண்டிவரும் என்பது அறிந்த ஜேஸன் துடித்தான். மீடியாவை நோக்கி, உன் காதல் உண்மையானால், நீ இதுவரையில் செய்த உதவிகளெல்லாம் போதாது; இப்போது எப்பாடுபட்டாயினும், தப்ப உதவி செய்தாக வேண்டும்" என்று கெஞ்சினான்.
நீ
மீடியாவின் காதலில் களங்கமில்லை. அவள் அதன் உறுதியைக் காட்டினாள்; அதற்காக எதையும் துறக்க முன் வந்தாள். ஆனால், அவள் உறுதி எவர் நெஞ்சையும் திடுக்குற வைக்கத்தக்கதாயிருந்தது. தான் உயிருக்குயிராய் நேசித்த தன் தம்பி அப்ஸிர்ட்டஸை அவள் உடன் தானே கொன்று, அவன் உடலைத் துண்டு துண்டாகக் கிழித்து, தந்தையின் கப்பல் அணுகுந்தோறும் அவன் முன் ஒரு துண்டை எறிந்தாள். அப்ஸிர்ட்டஸிடம் மீடியாவைவிட மிகுதியாக உயிர் வைத்திருந்தவன் அயதிஸ். ஆகவே, அவன் இறந்த உடலின் துண்டைக் கண்முன் கண்டதும், கப்பலைச் சற்று நிறுத்தி அதை எடுத்து வைத்துக் கொண்டு புலம்பினான். இதனால் பின் தொடரும் வேகம் குறையவே ஜேஸன் தப்பியோட முடிந்தது.
திரும்பிவரும் பயணம் மாதக் கணக்காக நீண்டது. இடையூறுகளும் பல ஏற்பட்டன. ஆனால், ஜேஸனின் வீரமும் மீடியாவின் மாயத் திறமையும் அவர்களைக் காத்தன. கடைசியில் அவர்கள் இயோல்கஸ் வந்து சேர்ந்தனர்.
கொடுங்கோலன் பீலியஸ், இதற்குள் ஜேஸனின் தந்தையைக் கொன்றுவிட்டான். அத்துடன் பொன்மறியின் கம்பிளியைக் கொண்டு வந்தபின்னும் ஜேஸன் கோரிய வண்ணம் முறைப்படி அரசுரிமையை அவனுக்குத் தர மறுத்துவிட்டான். ஜேஸன் மனம் மீண்டும் சோர்வுற்றது. ஆனால், மீடியா பீலிஸை ஒழிக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டாள்.