பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

143

பீலியஸ் இப்போது கிழவனாயிருந்தான். தான் அரிதிற் பெற்ற ஆட்சியை நீடித்து ஆள இப்போது இளைஞனா யிருந்தால் எவ்வளவு நல்லது என்று அவன் அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வான். தன் மாயத்தால் இதை அறிந்த மீடியா, அவன் புதல்வியரிடம் சென்று, “உங்கள் தந்தையை என்னால் இளைஞனாக்க முடியும்” என்றாள்.

இதை மெய்ப்பிப்பவள்போல அவள் ஒரு கிழ ஆட்டைத் துண்டு துண்டாக்கி ஒரு மருந்து கலந்துமிடாவிலிட்டுக் கொதிக்க வைத்தாள். புதல்வியர்கள் கண்கள் வியப்புடன் கண்டு களிக்க,

ளஆடு ஒன்று அதிலிருந்து கத்திக் கொண்டு வெளிவந்தது. இவ்வருஞ் செயலைப் புதல்வியர் தந்தையிடம் கூறினர். இந்த முறையை அவன் விரும்பா விட்டாலும், இளமை பெறும் ஆவல் அவனைத் தூண்டிற்று. அவன் இணங்கினான். மீடியா, புதல்வியர் கண்காண அவனைத் துண்டு துண்டாக்கினாள். ஆனால், எதிர்பார்த்தபடி அவனை இளைஞனாக்க மறுத்தாள்.

புதல்வியரிருவரும் வெகுண்டு தம் தம்பியிடமும் பிறரிடமும் கூறிக் கலகம் விளைவித்தனர். அதன் பயனாக ஜேஸனும் மீடியாவும் நகரை விட்டுத் துரத்தப்பட்டனர்.

காதலரிருவரும் கொரிந்த் நகர் சென்று அதன் மன்னனான கிரியானிடம் அடைக்கலம் புகுந்தனர். அவன் ஜேஸனை அன்புடன் வரவேற்றான். அவனுக்கு ஆதரவளிக்கவும் இணங்கினான். ஆனால், அயலினத்தாளாகிய மீடியாவைக் கைகழுவிவிட்டால், தன் மகள் கிளாகியை அவனுக்கு மணஞ்செய்வித்து அரசுரிமையையும் அளிப்பதாக உறுதி கூறினான்.

மீடியாவிடமிருந்து பல உதவி பெற்றும், ஜேஸனுக்கு அவளிடம் உள்ளூரக் காதல் கிடையாது. அத்துடன் அவள் மாயத்திறமை கண்டு, அவன் பொறாமையும் அச்சமும் கொண்டான். ஆகவே, அவன் கிரியான் விருப்பத்துக்கு இணங்கினான். இஃதறிந்த மீடியா, தான் அவனுக்காகச் செய்த தியாகங்களை எடுத்துக்கூறி மன்றாடினாள். பயனில்லாது போகவே, அவள் பழி வாங்க உறுதி கொண்டாள்.