பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

66

151

“ஆ, எரிகிற கட்டையை இதற்கா அணைத்தெடுத்தேன்" என்றாள் தாய்.

தாயின் உள்ளத்தைவிட மனைவியின் உள்ளம் விரைந்து

வேலை செய்தது.

66

"LOITED"

மா

“என்னை அம்மா என்று கூப்பிடு."

“ஏன்?”

66

"பழைய உறவு போய்விட்டது. அது வேண்டா?"

66

'அம்மா, இப்போதே அந்தக் கட்டையை எரித்து

விடேன்.

அல்தெயாவின் செயலற்ற துயருக்குக் கிளியோப் பாத்ரா குரல் கொடுத்துவிட்டாள். கட்டையை அணைத்தெடுக்க அன்று விரைந்ததைவிட அதை எடுத்துத் தீக்கிரையாக்க இன்று அவள் தாயுடல் விரைந்தது.

பாதி எரிந்த கரிக்கட்டை, அது மீண்டும் பற்றிற்று. பற்றிப் புகைந்து, எரிந்தது.

தாய் சிரித்தாள்.

மனைவி அது எரியும்வரை பொறுக்காதவள்போல், அதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அனலுடன் அனலாகத் தன் கண்பார்வையால் அதை எரிப்பதுபோல, அவள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

-

தன்னை எரிப்பதுபோலக் கட்டை எரியப் பார்த்திருந்தாய் கட்டையைத் தீ எரிப்பது போதாமல், கண்ணில் கனலை எழுப்பி அதை எரிப்பவள் போலப் பார்த்திருக்கும் மனைவி- இக்காட்சியை கண்டான் மெலீகர்!

கடமை, உரிமை, காதல் ஆகிய மூன்றும் இழந்த அவன் வாழ்வு உள்ளூரப் புகைந்தழன்றது!

அகஉலகின் இப்புயல்களிடையே புறஉலகின் ஒரு காற்று வந்து புகுந்தது.