பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

அப்பாத்துரையம் - 36

"முரட்டு வகுப்பினர் பன்றிக்காகப் பழிவாங்கப் புகுந்து விட்டனர்” என்ற செய்தி அவன் காதில் விழுந்தது.

அவர்கள் காதுகளிலும் விழுந்தது. ஆனால், அவர்கள் பேசவில்லை.

மற்றக் காலிடேரனியர் நெஞ்சுகள் துடித்தன மெலீகர் குடும்பப் புயல்களிடையே சிக்கிவிட்டான்.

இனி தமக்கு உதவுவானோ மாட்டானோ என்று அவர்கள் உள்ளங்கள் தத்தளித்தன.

"நான் கடமையாற்றுகிறேன்

-

கட்டை விரைந்து எரியட்டும்" என்று கூவிக் கொண்டு மெலீகர் வெளியேறினான்.

அதிர்ச்சி, மகிழ்ச்சி, பாராட்டு, மாளாத்துயரம் ஆகிய

பல்வகை

உணர்ச்சிகளுக்கும்

ஒருங்கே ஆளாயினர் காலிடோனியர் - ஆனால், தாயும் மனைவியும் உணர்ச்சியற்ற மரக்கட்டைகளாய், மரக்கட்டை எரிவதையே ஆர்வத்துடன் பார்த்திருந்தனர்.

முரட்டு வீரர் வீசிய முதல் அம்புக்கு அவன் பலியானான். ஆனால், அந்த அம்பை வீசிய கையும், இலக்கு நோக்கிய கண்ணும் பட்டுவிழத் தன் அம்பை வீசினாள் அட்லாண்டா!

மெலீகர் இறந்தான். அவனுக்காகத் தாய் கலங்கவில்லை. மனைவி அழவில்லை. ஆனால், என்றும் எதற்கும் கண்ணீர் விடாத வீர அணங்கு அட்லாண்டா ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டாள்!