பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. அட்லாண்டாவின் ஓட்டப்பந்தயம்

(ஆண்மையில் ஆடவரை வென்ற ஒரு நங்கை! வீரன் மெலீகரின் மதிப்புக்குரியவளாகியும், அவன் காதலை வெறுத்து வாழ்ந்தாள் இறுதியில் காதல் அவள் வாழ்வில் புகுந்து அவளை மாற்றிய வரலாறே அட்லாண்டாவின் கதையாகக் காட்சி தருகிறது)

ஷேணியஸ் என்ற அரசனுக்குப் பெண் குழந்தை என்றாலே பிடிக்கவில்லை. அவனுக்கு ஆண் குழந்தைகள் பிறந்த போதெல்லாம் மகிழ்ச்சியடைந்தான். ஆனால், இறுதியில் அட்லாண்டா பெண் குழந்தையாய்ப் பிறந்த போது, அதை ஏற்க மறுத்தான். அதை மலைப் பாறைகளில் கொண்டு போட்டு விடும்படி கட்டளையிட்டான்.

குட்டியை இழந்த ஒரு கரடி குழந்தை அட்லாண்டாவைச் சிலநாள் பேணி வளர்த்தது. காட்டில் கரடி வேட்டையாடிய சில வேடர் அவளைக் கண்டெடுத்துத் தம் பிள்ளையாக வளர்த்தனர். அவளும் நாளடைவில் வேட்டையில் வல்லவ ளானாள். ஆடவரைவிடத் திறமையாக ஓடவும் குதிரை யேறிச் செல்லவும் இலக்குத் தவறாது அம்பு செலுத்தவும் அவள் பழகினாள்.

அட்லாண்டா நெட்டையான அழகான வடிவமைப் புடையவளாயிருந்தாள். ஆயினும், மற்ற அழகிய பெண்களைப் போல அவள் இன்ப வாழ்வு விரும்பவில்லை. ஓட்டப் பந்தயங் களில் அவளை வெல்லும் ஆடவர் கிடையாது. வேட்டையிலும் போரிலும் அவள் முதன்மை பெற்று விளங்கினாள். பெண்களின் இயற்கைப்படி அவள் ளைஞர்களைக் காதலிக்கவோ, அவர்கள் காதலுக்கு இடங்கொடுக்கவோ இல்லை.