பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

அப்பாத்துரையம் - 36

அவள் ஆடவரிடையே ஒருதடவை தான் ஒருவனிடம் ஆழ்ந்த நட்புக் கொண்டாள். மெலீகர் என்ற ஒப்பற்ற வீரனிடம் அவள் கொண்டிருந்த மதிப்பு அத்தகைய நட்பாயிற்று. ஆனால், அச்சமயம் அவனுக்கும் அட்லாண்டாவுக்கும் இடையே வயது, வாழ்க்கைநிலை ஆகியவற்றில் மிகுதி தாலை இருந்தது. அவன் இளமை தாண்டியவன். அவளோ இன்னும் கட்டிளமையை எட்டிப் பிடிக்கவில்லை. அவன் மணமானவன்; அவன் மனைவி அவனிடமே உயிரை வைத்திருந்தாள். அவளோ அவன் படை வீரருள் ஒரு படைவீரன் போலவே நடந்து வந்தாள். இந்நிலையிலும் ஒருவரையறியாமல் ஒருவர் உள்ளத்தில் காதல் பிறந்தது. ஆனால் அது கைகூடாக் காதலாய்ப் போயிற்று. அட்லாண்டாவை எதிர்க்கத் துணிந்த சில திரிகளைத் தாக்கி அவன் உயிர்நீத்தான். அவனைக் கொன்றவர்களை ஒழித்த அவள் நட்புக் கடன் தீர்ந்தது.

66

"மணஞ் செய்வதானால் மெலீகர்போன்ற அஞ்சா உறுதியுடைய வீரனை மணம் செய்ய வேண்டும். அல்லது மணம் நாடாத கன்னியாகவே காலங்கழிக்க வேண்டும்” இதுவே அட்லாண்டாவின் உள்ளுறுதியாயிற்று.

அட்லாண்டாவின் வீரப்புகழ் அவள்தந்தை காதுக்கும் எட்டிற்று. சில அடையாளங்களால் அதுதன் மகளே என்று அவன் தெரிந்து கொண்டான். பெண் குழந்தை வேண்டாம் என்று முன்பு அவளை அவன் வெறுத்துத் தள்ளியிருந்தான். இப்போது ஆண்களைவிட அவள் வீரமுடையவளாயிருந்தது கண்டு அவன் அவளை மீண்டும் வரவழைத்துத் தன் மகவாக ஏற்றான்.

அவளை யாராவது நல்ல அரசிளஞ் செல்வருக்கோ, வீரனுக்கோ மணமுடித்துவிடவும் அவன் விரும்பினான்.

அட்லாண்டா தன் உறுதியைத் தந்தையிடம் தெரிவித்தாள். “என்னுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வெற்றி பெறுபவனையே நான் மணந்து கொள்வேன். அத்துடன் போட்டிக்கு வந்தவர் வெற்றி பெறாவிட்டால், அவர்கள் உயிரிழக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருக்கவேண்டும்” என்று அவள் கூறினாள்.