பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

அப்பாத்துரையம் - 36

அப்போதுதான் மிலானியனுக்கு எல்லாரும் வருந்தியதன் காரணம் தெரிந்தது. போட்டியில் தோற்றதனால், இளைஞன் தான் விரும்பிய நங்கையை இழந்ததுடன் நிற்கவில்லை. அவன் உயிரையும் இழக்க வேண்டி வந்தது.

அழகிய இளைஞனின் தலை மண்ணில் உருண்டது. அவன் பொன் முடியில் அவன் குருதியும் மண் புழுதியும் படிந்தன.

இத்தனைக்கும் காரணமான நங்கையின் முகத்தை அவன் இப்போது தான் ஏறிட்டுப் பார்த்தான். அவனை அறியாமல் அது அவன் மனத்தைக் காந்தம்போலக் கவர்ந்தீர்த்தது.

இளைஞனின் சாவுக்காட்சி கூட அவன் நெஞ்சை அச்சுறுத்தவில்லை.

எப்படியும் அவளைப் பெற முயல்வது என்று அவன் துணிந்தான்.

மறுநாளே

மிலானியன் மன்னனிடம் சென்று அட்லாண்டாவைத் தான் மணம் செய்ய விரும்புவதாகக் கூறினான். இதைக் கேட்டதும் மன்னன் திடுக்கிட்டான்.

மன்னன்: நேற்றுத்தானே அழகிய ஓர் இளைஞன்

உயிரைப்

பலி

கேள்விப்பட்டதில்லையா?

கொடுத்தான்.

ன்

அதைப்பற்றிக்

மிலானியன்: நானே நேரில் வந்து பார்த்தேன்.

மன்னன்: பார்த்ததும் ஏன் இப்படி வந்தாய்? சாகவழி தேடித்தான் வந்தாயா?

மிலானியன்: இல்லை, எத்தனையோ ஆடவர் உயிரைக் குடித்த அந்த அழகைப் பெற்று வாழவே விரும்பிகிறேன்.

மன்னன்: அது முடியுமென்று நீ நினைக்கிறாயா?

மிலானியன்: ஆம், ஒரு மாதம் கழித்துப் பந்தய நாள் குறித்து, அதுவரை பயிற்சி ஏற்பாட்டுக்கு வாய்ப்பு அளித்தால் முடியுமென்று கருதுகிறேன்.

மன்னன்: சரி, அப்படியே ஆகட்டும். ஒரு மாதங்கழித்து நாட்குறித்துப் பறைசாற்றுவிக்கிறேன்.